குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பூசி தொடர்பில் வேறு
படுத்தப்பட்ட பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகள் (விடிஎஸ்) குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்கள் கூடுதல் கேள்வி
களைக் கேட்டனர்.
பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவர் (அல்ஜுனிட் குழுத்தொகுதி):
கேள்வி: 'எம்ஆர்என்ஏ' அல்லாத தடுப்பூசிகள் தங்கள் பிள்ளை
களுக்கு போடலாம் என்று அனு
மதிக்கப்படும் வரை பெற்றோர் எவ்வளவு காலம் காத்திருக்க சுகாதார அமைச்சு அனுமதி அளிக்கிறது? இது அவர்களுக்கு அதிக தெரிவுகளை வழங்குகிறது. மேலும் தடுப்பூசி போட்ட பிறகு வரும் பக்கவிளைவுகள் பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் கவலைகளைப் போக்கவும் உதவுகிறது. அத்தகைய 'எம்ஆர்என்ஏ' அல்லாத ஒரு தடுப்பூசி நிறுவனமான நோவாவெக்ஸ், நவம்பர் 22ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் தொற்று நோய் சிறப்பு அனுமதி பாதையின் ஒப்புதலுக்கான தரவைச் சமர்ப்பித்தது.
நோவாவெக்ஸ் அல்லது வேறு எந்த 'எம்ஆர்என்ஏ' அல்லாத தடுப்பூசி தயாரிப்பாளரும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான அங்கீகாரத் தரவைச் சமர்ப்பித்துள்ளதா? அப்படியானால் இந்தத் தடுப்பூசிகள் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்?
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்:
பதில்: ஃபைசர்- பயோஎன்டெக் (கமிர்னட்டி) தடுப்பூசியானது, விரிவான மருத்துவ பரிசோதனை
களுக்கு உட்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகளின்போது, இது பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது தெரிய வந்தது. நோவாவெக்ஸ், சுகாதார அறிவியல் ஆணையத்தால் மதிப்பிடப்படுகிறது. விஞ்ஞானிகள் தங்கள் வேலையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் அதை சேர்த்துக்கொள்வதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
இதற்கிடையில், வேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரான் நம்மை நோக்கி வேகமாக வருகிறது. ஒரு சிறிய விழுக்காட்டு பிள்ளைகள் மிகவும் நோய்வாய்ப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாக மாற வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் பிள்ளைக்கு எம்ஆர்என்ஏ தடுப்பூசியைப் போடுமாறு நான் பரிந்துரைக்கிறேன். இப்போது செய்வதுதான் சரியானது என்று நினைக்கிறேன்.
யிப் ஹோன் வெங்
(இயோ சூ காங்):
கேள்வி: சில இளம் பிள்ளைகளின் பெற்றோர் அவர்களைக் கட்டாயம் அல்லாத மருத்துவ மதிப்பாய்வுகளுக்கு அனுப்பவில்லை என்றால், கண்டறியப்படாத மருத்துவ நிலைமைகள் மற்றும் குறிப்பாக ஒவ்வாமைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு முன், அனைத்து இளம் குழந்தைகளை யும் மருத்துவ ஆய்வுக்கு உட்
படுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்துமா?
தடுப்பூசி இயக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் மருத்துவரின் அனு
மதியைப் பெறுவதற்கு அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட சில பெரியவர்கள் எவ்வாறு அறிவுறுத்தப்படுகிறார்களோ அது போலவே இதுவும் இருக்கும்.
சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி:
பதில்: பெரியவர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் நாங்கள் அந்த அணுகு முறையை எடுத்தோம். ஏனெனில் அந்த நேரத்தில், எங்களிடம் இருந்த தரவுகளின் அளவு குறைவாகவும் எங்களுக்கு இருந்த அனுபவத்தின் அளவு குறைவாகவும் இருந்தது. மேலும் இந்த நோயைப் பற்றி இப்போது எங்களுக்கு நிறைய தெரிகிறது.
எனவே குழந்தைகளுக்கான அணுகுமுறை பெரியவர்களிட
மிருந்து வேறுபட்டதல்ல. அவர்களுக்கு ஒரு அடிப்படை நிலை இருந்தால், ஆபத்து இருந்தால், மருத்துவர் அதைப் பற்றி அறிவார். ஆனால் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால், தடுப்பூசி தொடர பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு முன் அனைத்து குழந்தைகளும் மருத்துவ மறுஆய்வுக்கு செல்ல வேண்டுமா என்ற உறுப்பினரின் கேள்விக்கான சுருக்கமான பதில் இல்லை என்பதே.
ஃபூ மீ ஹார் (வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி):
கேள்வி: ஓமிக்ரான் உட்பட கடுமையான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) கணிசமாக அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை பயணிகளுக்கு இரண்டு தடுப்பூசி கள் மட்டுமே தேவை என்பதைத் தாண்டி ஒரு கூடுதல் தடுப்பூசி தேவை என்பதை சுகாதார அமைச்சு பரிசீலிக்குமா?
சுகாதார அமைச்சர்
ஓங் யி காங்:
பதில்: இரண்டு தடுப்பூசிகள் என்றென்றும் நீடிக்காது என்பதை நாம் அறிவோம். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே நம்முடைய வழிகாட்டுதலை செயல்படுத்தியுள்ளது. அதாவது அவற்றின் காக்கும் காலம் ஒன்பது மாதங்கள் அல்லது 270 நாட்கள்.
தொகுதியில்லாத எம்.பி. லியோங் மன் வாய்:
கேள்வி: சில ஆசிரியர்கள் ஏற்கெனவே பள்ளிகளில் 'விடிஎஸ்' நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்று குடியிருப்பாளர்களிடமிருந்து தகவல் பெற்றேன். அப்படியானால், அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள் அப்படி செய்கிறார்களா என்பதை கல்வி அமைச்சரால் உறுதிப்படுத்த முடியுமா?
கல்வி அமைச்சர்
சான் சுன் சிங்:
பதில்: எந்தெந்த பள்ளிகள் 'விடிஎஸ்' நடவடிக்கைகளை மேற்கொண்டன. எந்தெந்த ஆசிரியர்கள் 'விடிஎஸ்' நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்ற கூடுதல் தகவல்களை திரு லியோங் தர இயலுமா? அப்படி இருந்தால் பள்ளி கள் மற்றும் அதை செய்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இப்போதைக்கு நமது பள்ளிகளில் 'விடிஎஸ்' நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.
முடிந்தவரை நமது மாணவர்கள் முதன்மை பாடத்திட்டத்திலும் பள்ளி நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.