இளைய பெண் வழக்கறிஞர்களுக்கு தூண்டுகோலாக இருக்க உறுதி

இளைய பெண் வழக்கறிஞர்களுக்கு தூண்டுகோலாக இருக்க உறுதி

2 mins read
bc3fe984-cd66-4b25-a67d-16c2615eb753
புதிய மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள திருவாட்டி மரினா சின் லி யுவென், 56, திருவாட்டி கோ சுவீ யென், 40. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

இவ்­வாண்­டுக்­கான மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளாக நேற்று அறி­விக்­கப்­பட்ட மூவ­ரில் இரு­வர் பெண்­கள். தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் சட்ட ஆண்டு தொடக்க நிகழ்­வில் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

திரு டான் புவே பூன், திரு­வாட்டி மரினா சின் லி யுவென் மற்­றும் திரு­வாட்டி கோ சுவீ யென் ஆகி­யோரே அந்த மூவர்.

தலை­சி­றந்த திறன்­கள், சட்­டம் பற்றி விரி­வான அறி­வாற்­றல், உயர்­தர நிபு­ணத்­து­வம் போன்­ற­வற்­றைப் பெற்­றி­ருக்­கும் வழக்­க­றி­ஞர்­க­ளைச் சிறப்­பிக்க சீனி­யர் கவுன்­சல் (எஸ்சி) எனப்­படும் மூத்த வழக்­க­றி­ஞர் கௌர­வம் வழங்­கப்­ப­டு­கிறது.

இந்த நிய­ம­னம் பெற்ற மூவ­ரும் தங்­க­ளது பெய­ருக்­குப் பின்­னால் 'எஸ்சி' என்­பதை இணைத்­துக்­கொள்­ள­லாம்.

மூத்த வழக்­க­றி­ஞர்­கள் என்­னும் சிறப்­பைப் பெற்ற இரு பெண்­களும் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னர். இளைய பெண் வழக்­க­றி­ஞர்­

க­ளுக்கு முன்­னோ­டி­யாக தங்­க­ளால் விளங்­க­மு­டி­யும் என்று அவர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.

டான் கோக் குவான் பார்ட்­னர்­ஷிப் சட்ட நிறு­வ­னத்­தின் இணை நிர்­வாக பங்­குதாரரான திரு­வாட்டி சின், 56, சட்­டத் தொழி­லில் நீடித்து நிலைத்­தி­ருப்­பது ஒரு பிரச்­சினை என்­றார். பல்­வேறு கார­ணங்­க­ளால் பல வழக்­க­றி­ஞர்­கள் தங்­க­ளது சட்­டத் தொழி­லில் இருந்து வில­கிச் செல்­வ­தாக அவர் கூறி­னார்.

"பெண்­க­ளால் சிறந்து விளங்­க மு­டி­யும் என்­ப­தில் நம்­பிக்கை கொண்ட நான், பெண் வழக்­க­றி­ஞர்­கள் தங்­க­ளது தொழி­லைக் கைவி­டும்­போது பெரி­தும் வருந்­து­ வேன்.

"சொந்­தக் கார­ணங்­க­ளுக்­காக அவர்­கள் வில­கி­னால் சொல்­வ­தற்கு ஒன்­று­மில்லை. அவ்­வா­றின்றி சில சூழ்­நி­லை­கள் கார­ண­மாக இருந்­தால் அது ஒரு துர­திர்ஷ்­ட­மான நிலை.

"மனை­வி­யாக, அம்­மா­வாக, சகோ­த­ரி­யாக, மக­ளாக மட்­டுமே இருக்க பெண்­கள் படைக்­கப்­பட்­டார்­களா என்­பது என் கேள்வி.

"எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொறுப்பு, பெண்­க­ளால் சாதிக்க இன்­னும் நிறைய உள்­ளது என்

­ப­தற்­கான அடை­யா­ளம்," என்­றார் திரு­வாட்டி சின்.

மற்­றொ­ரு­வ­ரான திரு­வாட்டி கோ, 40, வோங் பார்ட்­னர்­ஷிப் நிறு­வ­னத்­தின் பங்­குதாரர்.

சட்­டத் தொழி­லில் இருந்து வில­கு­தல் விகி­தம் கவ­லை அளிப்பதாகத் தெரி­வித்த அவர், தமக்கு அளிக்­கப்­பட்ட புதிய நிய­ம­னம் தம்மை ஊக்­கு­விப்­ப­தா­கச் சொன்­னார்.