கூடுதல் மீன்களை வளர்க்க தொழில்நுட்பப் பண்ணை

2 mins read
3d935000-b1d9-4807-a7b1-395795c378a3
ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1,200 டன் ரெயின்போ டிரெளட் வகை மீன்களை இந்த அதிநவீன தொழில்நுட்பப் பண்ணையில் வளர்க்கமுடியும். படம்: ஆசன்டோஃப்ட் அக்குவா -

'டிரெளட்' எனும் ஒரு­வகை மீன்­களை வளர்க்க அதி­ந­வீன பண்ணை ஒன்று அடுத்த ஆண்டு முதல் கிராஞ்சிக்கு அருகே உள்ள நியோ டியூ பகு­தி­யில் இயங்­க­வுள்­ளது. இதில் ஆண்­டு­தோ­றும் சுமார் 1,200 டன்­ 'ரெயின்போ டிரௌட்' வகை மீன்­களை வளர்க்­கமுடியும்.

இதன் மூலம் உள்­ளூ­ரில் வளர்க்­கப்­படும் மீன்­க­ளின் எண்­ணிக்­கைளை அதி­க­ரிக்­க­மு­டி­யும் என்று புளூ அக்­குவா இன்­டர்­னே­ஷ­னல் நிறு­வ­னம் தெரி­வித்­தது. இந்­தப் பண்­ணைக்­குத் தேவை­யான தொழில்­நுட்­பத் தீர்­வு­களை அந்­நிறு­வ­னம் வழங்­கு­கிறது.

1,200 டன்­ என்­பது ஆண்டு­தோ­றும் சிங்­கப்­பூ­ரில் வளர்க்­கப்­படும் மீன்­களில் கால் பங்கு. 2016ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடையே ஆண்­டு­தோ­றும் 4,578லிருந்து 4,851 டன்­ வரை எடை­கொண்ட மீன்­கள் வளர்க்­கப்­பட்­டன. 2020ஆம் ஆண்டு இது 3,960 டன்­னாகக் குறைந்தது. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் மீன் விற்­பனை குறைந்­தது இதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர், 2030ஆம் ஆண்­டுக்­குள் தனக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்தில் 30 விழுக்­காட்டை உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்­கும் இலக்­கைக் கொண்­டுள்­ளது. அதற்கு இத்­திட்டம் உத­வும் என்று புளூ அக்­குவா சொன்­னது.

சுவை­யில் சால்­மன் வகை மீனைப்­போல் குளிர்­நீ­ரில் வசிக்­கும் டிரெ­ளட் மீன் இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது. சால்­மன் மீன்கள் சிங்­கப்­பூ­ரில் பிர­ப­ல­மா­னவை.

டிரெ­ளட் மீனின் செதில்­கள் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்­தில் கவர்ச்­சி­யாக இருக்­கும் என்று புளூ அக்­குவா குழு­மத்­தின் தலை­வ­ரும் நிர்­வாக அதி­கா­ரி­யு­மான டாக்­டர் ஃபார்ஷாத் ஷிஷெச்­சி­யன் கூறி­னார். சால்­ம­னின் செதில்­க­ளின் நிறமோ சற்று மங்கி இருக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தொழில்­நுட்­பப் பண்­ணையை உரு­வாக்க சுமார் 20 மில்­லி­யன் வெள்­ளி­யா­கும் என்று டாக்­டர் ஃபார்ஷாத் தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் உணவு அமைப்பு, என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு ஆகி­யவை வழங்­கும் மானி­யங்­களை புளூ அக்குவா பயன்­ப­டுத்­திக்­கொள்ள விரும்புகிறது என்று அவர் கூறி­னார்.