பள்ளிப் பாதுகாவலர் மீது காரை ஏற்றிவிடப் போவதாக மிரட்டல்; 61 வயது ஆடவர் கைது

பிடோக் வட்­டா­ரத்­தில் அமைந்­து உள்ள ரெட் ஸ்வாஸ்­திகா

பள்­ளிக்கு வெளியே நேற்று காலை பாது­கா­வ­லர் ஒரு­வர் ­மீது காரை ஏற்றி விடப்­போ­வ­தாக ஓட்­டு­நர் ஒரு­வர் மிரட்­டி­னார். இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் வலம் வந்­தது.

இந்நிலையில், மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் 61 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடக்­கப்­பள்­ளி­யின் நுழை­

வா­யி­லுக்கு வெளியே காணப்­பட்ட வெள்ளை நிற 'பென்ட்லி' சொகுசு காரை வழி­ம­றித்­த­படி பாது­கா­வ­லர் நின்­று­கொண்­டி­ருந்­ததைக் காணொளி காட்டியது.

அப்­பள்ளி வளா­கத்­திற்­குள் நுழைய அதன் ஓட்­டு­நர் முற்­ப­டு­வது தெரிந்­தது. அந்த காருக்கு முன்­னால் வழி­ம­றித்து நின்ற பாது­கா­வ­ல­ரைப் பொருட்­ப­டுத்­தாது, அங்­கு­லம் அங்­கு­ல­மாக அந்த காரை முன்­னால் நகர்த்­தி­னார் அந்த ஓட்­டு­நர்.

இந்­நி­லை­யில், இந்­தக் காணொளி குறித்து தமக்­குத் தெரி­யும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

பாது­கா­வ­லர் ஒரு­வ­ருக்­கும் பள்ளி ஊழி­யர் ஒரு­வ­ருக்­கும் ஆபத்தை விளை­விக்­கும் வித­மாக ஓட்­டு­நர் ஒரு­வர் தமது காரை இயக்குவதை அந்­தக் காணொளி காட்­டி­ய­தாக அமைச்­சர் சான் கூறி­னார்.

இதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நடத்தை என்று அவர் வர்ணித்தார்.

"பெரி­ய­வர்­க­ளாக நாம் மற்­ற­வர்­களை எப்­படி மரி­யா­தை­யு­டன் நடத்து­கி­றோம் என்­ப­தில் நம்­மு­டைய பிள்­ளை­க­ளுக்­குச் சிறந்த உதா­ர­ண­மா­கத் திகழ வேண்­டும். நமது பள்­ளிச் சமூ­கத்­தின் ஒட்­டு­மொத்த பாது­காப்­பிற்­காக நடப்­பில் உள்ள விதி­க­ளுக்கு உட்­பட்டு நாம் நடந்து­ கொள்ள வேண்­டும்," என்று திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பாது­கா­வல் ஊழி­யர் சங்­கம், காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தது.

சம்­பந்­தப்­பட்ட பாது­கா­வ­ல­ரான 62 வயது திரு நியோ ஆ வாட் நல­மாக இருப்­ப­தா­க­வும் வீட்­டில் குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும் சங்­கம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பிற்­ப­கல் பதி­விட்­டது.

திரு நியோ ஏறத்­தாழ மூன்று ஆண்­டு­க­ளாக அப்­பள்­ளி­யில் பணி­பு­ரிந்து வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ள­ரான 39 வயது ரேமண்ட் சின் தெரிவித்தார்.

"தமது வலது முழங்­கா­லில் வலி ஏற்­பட்­டுள்­ள­தாக திரு நியோ எங்­க­ளி­டம் தெரி­வித்­தார். மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­குப் பிறகு அவ­ருக்கு மூன்று நாட்­கள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது," என்று திரு சின் தெரி­வித்­தார்.

காலை 7.30 மணி அள­வில் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக திரு சின் கூறி­னார். அப்­போது தங்­கள் பிள்­ளை­களைப் பெற்­றோர் பள்­ளிக்கு அனுப்­பிக்­கொண்­டி­ருந்­த­னர். சர்ச்­சை­யில் சிக்­கியுள்ள காரில் பள்­ளிக்­குள் செல்ல தேவை­யான ஒட்டு ­வில்லை இருந்­தும் அது வரி­சை­யில் காத்­தி­ருக்­கா­மல் முந்­திச் செல்ல முயன்­ற­தால் நிறுத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு நியோ­வின் வீட்­டுக்கு சங்­கத்­தி­னர் நேற்று பிற்­ப­கல் சென்று அவரை நலம் விசா­ரித்­த­னர். திரு நியோ­வுக்கு $200 ரொக்­க­மும் உடல் ஊட்­டத்­துக்­குத் தேவை­யான பொருட்­களும் வழங்­கப்­பட்­டன.

இதற்­கி­டையே, கார் ஓட்­டு­ந­ரின் செய­லைக் கண்­டித்­தும் திரு நியோ­வின் கட­மை­யு­ணர்­வைப் பாராட்­டி­யும் அர­சி­யல்­வா­தி­கள் சிலர் தங்­கள் ஃபேஸ்புக் பக்­கத்­தில் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

"பணி­யில் ஈடு­படும் நமது பாது­கா­வ­லர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­படும் இத்­த­கைய மூர்க்­கத்­த­ன­மான செயல்­க­ளைச் சகித்­துக்­கொள்ள முடி­யாது," என்று தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­ஸின் (என்­டி­யுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் சாடி­னார்.

"பள்­ளி­யின் பாது­காப்­புக்கு எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­டக்­கூ­டாது என்ற நோக்­கில் திரு நியோ காரை வழி­ம­றித்து நின்­றார். இது அவ­ரது தொழில் பக்­தி­யைக் காட்­டு­கிறது," என்று உள்­துறை துணை

அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் பாராட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!