74 வயது முதியவரை காயப்படுத்தியவருக்கு சிறை

74 வயது முதியவரை காயப்படுத்தியவருக்கு சிறை

2 mins read
a2d962da-76b7-42d0-8e5d-8a96481f1cf3
-

முதிய துப்­பு­ர­வுப் பணி­யா­ளர் ஒரு­வரை அடித்­துக் காயப்­ப­டுத்­திய ஆட­வ­ருக்கு 9 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட 74 வயது முதி­ய­

வ­ருக்கு கன்­னத்­தில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது.

அவ­ரது பொய்ப் பற்­களும் உடைந்­தன, வாயி­லி­ருந்து ரத்­தம் கசிந்­தது.

வேண்­டு­மென்றே காயம் விளை­வித்த குற்­றச்­சாட்டை சிங்­கப்­பூ­ர­ரான 60 வயது லிம் டின் சூன் ஒப்­புக்­கொண்­டார்.

2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 23ஆம் தேதி­யன்று பொங்­கோல் பேருந்து நிலை­யத்­தில் காலை உணவு சாப்­பிட இருந்த லிம்­முக்கு அங்கு உட்­கார இடம் கிடைக்­க­வில்லை.

எனவே, பேருந்து ஓட்­டு­நர்­

க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட இடத்­தில் அவர் அமர்ந்­தார்.

இதைப் பார்த்த அந்த முதி­ய­வர் அங்கு உட்­கா­ரக்­கூ­டாது என்று சொன்­ன­தும், லிம் சினங்­கொண்­டார். மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொண்ட லிம் முதி­ய­வ­ரைத் தாக்­கி­னார்.

லிம் அடித்­த­தில் அந்த முதி­ய­வர் கீழே விழுந்­த­தா­க­வும் மற்­ற­வர்­கள் உத­விய பிறகே அவ­ரால் மீண்­டும் எழுந்­தி­ருக்க முடிந்­த­தா­க­வும் அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

காணொ­ளி­யில் பதி­வான

அந்­தத் தாக்­கு­தல் நீதி­மன்­றத்­தில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

தாக்­கு­தலை நேரில் கண்ட நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யப் போக்­கு­வ­ரத்­துத் தூதர் லிம் டக் கியோங் காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தக­வல் தெரி­வித்­தார்.

காய­ம­டைந்த முதி­ய­வர் செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அவ­ருக்கு ஏழு நாட்­கள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­டது.

முதி­ய­வ­ரின் மருத்­து­வச் செலவு ஏறத்­தாழ $145 ஆனது. இந்­தத் தொகையை லிம்

கொடுத்­து­விட்­டார்.

பொது இடத்­தில் முதி­ய­வரை மூர்க்­கத்­த­ன­மா­கத் தாக்­கிய லிம்­முக்கு 10லிருந்து 12 வாரச் சிறைத் தண்­டனை விதிக்க வேண்­டும் என்­று அர­சாங்க வழக்­க­றி­ஞர் கேட்­டுக்­கொண்­டார்.

முதி­ய­வர் லிம்­மைத் தூண்­டும் வகை­யில் நடந்­து­கொள்­ள­வில்லை என்­றும் அவர் தமது கட­மை­யைத்­தான் செய்­தார் என்­றும் அவர் கூறி­னார்.

முதி­ய­வ­ரைத் தாக்­கிய பிறகு லிம் அவ்­வி­டத்­தை­விட்டு தப்பி ஓடி­யதை அவர் சுட்­டி­னார்.

தமது கட்­சிக்­கா­ரர் யோசிக்­கா­மல் நடந்­து­கொண்­ட­தா­க­வும் உண்­மை­யில் அவர் அப்­ப­டிப்­பட்­ட­வர் அல்ல என்­றும் லிம்­மின் வழக்­க­றி­ஞ­ரான ஜாஸ்­மின் தன­ராஜ் நீதி­மன்­றத்­தில் கூறி­னார். தமது செய­லுக்­காக லிம் வருத்­தப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார். முதி­ய­வரை அவர் திட்­ட­மிட்­டுத் தாக்­க­வில்லை என்­றார் அவர்.

வேண்­டு­மென்றே காயம் விளை­விக்­கும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் $5,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.