விடுதலைக்கு முன் கைதிகளுக்கு கல்வி, பயிற்சி நடவடிக்கைகள்
கைதிகள் தகுதியானவர் கள் என்று முடிவு செய்யப் பட்டால், அவர்களின் தண்டனைக் காலம் முடிவ தற்குள் சமூகத் தில் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறைச்சாலைகள் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாக புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் (எம்பிஎஸ்) கீழ் வேலை வாய்ப்புகளுடன் இது வழங்கப்படும்.
2014 மற்றும் 2018க்கு இடையில் வேலைக்குப் போவதற் காக மட்டும் சிறையை விட்டு சென்ற 24% பொதுக் கைதிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, மீண்டும் குற்றங்கள் புரிவோர் எண்ணிக்கை இரண்டாண்டு சராசரி விகிதம் 15 விழுக்காடாக இருந்ததால் பணி விடுதலைத் திட்டம் (WRS) கைவிடப்பட்டது. அதற்கு மாற்றாக 'எம்பிஎஸ்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் முஹம்மது ஃபைசல் இப்ராஹிம் நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் சிறைத் துறை நடத்தும் பணி விடுவிப்பு மையத்தில், எம்பிஎஸ்ஸுக்குத் தகுதியான கைதிகள் முகாம் பயிற்சியைத் தொடங்குவார்கள். "கைதிகள் வேலை செய்ய லாம், பயிற்சியின் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள லாம் அல்லது பகலில் சிறைக்கு வெளியே தங்கள் கல்வி யைத் தொடரலாம். அவர்கள் மாலையில் பணி விடுவிப்பு மையத்திற்குத் திரும்புவார்கள்," என்று இணைப் பேராசிரியர் ஃபைசல் விவரித்தார்.
நல்ல முன்னேற்றத்தைக் காண்பிப்பவர்கள் வார இறுதி நாள்களில் தங்கள் குடும்பங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்றும் அவர்கள் தொடர்ந்து முன்னேறினால் தினமும் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
$1.7 மி. மதிப்புள்ள கொவிட்-19 அரசு மானியங்கள் தொடர்பில் 57 மோசடிகள்
மார்ச் 2020 முதல் டிசம்பர் 2021 வரை, கொவிட்-19 அரசாங்க மானியங்கள் மற்றும் $1.7 மில்லியன் செலுத்தப் பட்ட முறைகேடு அல்லது போலியான விண்ணப்பம் தொடர்பில் காவல்துறைக்கு 57 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இருப்பினும், அமைப்புகள் மோசடியை முன்கூட்டியே கண்டறிந்ததால், வழங்கப்பட்ட தொகை குறைவாக இருந்தது. ஆனால் அந்த மோசடிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டதால், வழங்கப்பட்ட தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டது.
இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 42 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
பதிவாகிய 17 சம்பவங்கள் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், மொத்தம் $68,000 அரசு நிதி அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் திரு சண்முகம் கூறினார். அதில் சுமார் $31,000 வழங்கப்பட்டது, $7,000 மீட்கப்பட்டது.கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஏமாற்றுதல் அல்லது மோசடிக் குற்றங்கள் புரிந்தவர்கள் என்றும் திரு சண்முகம் கூறினார்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ல் ஆக அதிகமான அன்றாட மழைப் பொழிவு
ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று பதிவான மழைப்பொழிவே 2021ஆம் ஆண்டில் அதிகபட்ச தினசரி மொத்த மழை யாகும். அன்று சேகரிக்கப்பட்ட 247.2 மிமீ மழையானது, ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிகபட்ச தினசரி மொத்த மழைப்பொழிவாகும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று திரு மெல்வின் யோங்கிற்கு (ராடின் மாஸ்) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். ஆகஸ்ட் 1983ல் ஏற்பட்ட முந்தைய சாதனை யைவிட ஆகஸ்ட் 24ஆம் தேதியின் மழைப்பொழிவு சுமார் 40% அதிகமாகும்.
கனமழையின் விளைவாக சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் தரவு எதுவும் பொதுப் பயனீட்டுக் கழகத்திடம் இல்லை என்று திருவாட்டி ஃபூ மேலும் கூறினார்.
"பருவநிலை மாற்றம் அதிக தீவிரமான வானிலை சூழ்நிலைகளைக் கொண்டு வருவதால், கடுமையான மழையினால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் முன்னறிவிப்பு, உணர் திறன் திறன்களைத் தொடர்ந்து பலப்படுத்துகிறது. மேலும் வெள்ள அபாயங்களைக் குறைக்க செலவு குறைந்த நட வடிக்கைகளைச் செயல் படுத்துகிறது," என்று அவர் கூறி னார். ஆகஸ்ட் 24 அன்று, மேற்கு சிங்கப்பூரில் மூன்று மணி நேரத்திற்குள் சராசரியாக ஆகஸ்ட் மாத மழைப் பொழிவைவிட அதிகமாக பெய்தது என்று திருமதி ஃபூ கூறினார்.

