சிங்கப்பூரில் புதிதாக 438 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதற்கு முந்திய நாள் இந்த எண்ணிக்கை 389ஆக இருந்தது.
438 பேரில் 159 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டனர். எஞ்சிய 279 பேர் வெளிநாடு களிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை புதிதாக 846 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கட்கிழமை இது 750ஆக இருந்தது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 846 பேரில் 446 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள். எஞ்சிய 400 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் செவ்வாய்க்கிழமை 1.71ஆக சற்று குறைந்தது. மருத்துவமனைகளில் 165 கொவிட்-19 நோயாளிகள் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் விகிதம் 51.1 விழுக்காடாக இருந்தது. 17 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்
படுகிறது.

