85.6% மாணவர்கள் ஐந்து 'ஓ' நிலை பாடங்களில் தேர்ச்சி

85.6% மாணவர்கள் ஐந்து 'ஓ' நிலை பாடங்களில் தேர்ச்சி

2 mins read
e5ad06db-4af8-4b0d-b789-5fcd2fb0e8a5
சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ருஷில் ஸ்ரீநாத், பாஸ்கர் ஸ்ருதி. படம்: திமத்தி டேவிட் -

'ஓ' நிலை எனப்படும் ஜிசிஇ சாதா ரண நிலைத் தேர்வு முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­ட­தில் 85.6 விழுக்­காட்டு மாண­வர்­கள் ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்ட தேர்ச்­சி­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

2020ஆம் ஆண்டு தேர்வு எழு­திய மாண­வர்­க­ளின் 85.4 விழுக்­காட்டு தேர்ச்­சி­யைக் காட்­டி­லும் இது சற்று அதி­கம். கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மாண­வர்­கள் தங்களது வகுப்பறைகளி லேயே நேற்று முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

2021ஆம் ஆண்டு 23,555 மாண­வர்­கள் 'ஓ' நிலை தேர்வு எழு­தி­ய­தாக கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு, மதிப்­பீட்­டுக் கழ­க­மும் நேற்று கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

இவர்­களில் கிட்­டத்­தட்ட அனை ­வ­ரும், அல்­லது 99.8 விழுக்­காட்­டி­னர் குறைந்­த­பட்­சம் ஒரு பாடத்­தி­லும் 96.4 விழுக்­காட்­டி­னர் குறைந்­த­ பட்­சம் மூன்று பாடங்­க­ளி­லும் தேர்ச்சி பெற்­றுள்­ள­னர். கொவிட்-19 சூழ­லுக்கு இடை­யில் மாண­வர்­கள் வெளிக்­காட்­டிய செயல்­தி­றன் முந்­தைய ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டும் வகை­ யில் அமைந்­துள்­ளது என அறிக்கை குறிப்­பிட்­டது.

தொடக்­கக் கல்­லூரி, மில்­லெ னியா கல்­விக்­க­ழ­கம், பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி மற்­றும் தொழில் கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்­றில் சேர விரும்­பும் மாண­வர்­கள் தங்­க­ளது 'ஓ' நிலை முடி­வு­

க­ளைப் பயன்­ப­டுத்தி நேர­டிச் சேர்க்கை நட­வ­டிக்கை வாயி­லாக விண்­ணப்­பிக்­க­லாம். அதற்­கான பதிவு நேற்று பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் தொடங்­கியது. வரும் திங்­கட்­கி­ழமை மாலை 4 மணி வரை பதிவு செய்து­கொள்­ள­லாம்.

சுவிஸ் காட்­டேஜ் உயர்­நி­லைப்­பள்­ளி­யைச் சேர்ந்த ருஷில் ஸ்ரீநாத், அனைத்­துப் பாடங் ­க­ளி­லும் உச்­ச­பட்ச தேர்ச்­சி­யான 'ஏ1' மதிப்­பெண்­ணைப் பெற்­றது குறித்து மிக­வும் பூரிப்­ப­டை­வ­தா­கத் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"தேர்வு எழு­தும்­போது நாம் விழிப்­பு­ட­னும் நிதா­னத்­து­ட­னும் இருக்­க­வேண்­டும். மனப்­பா­டப் பயிற்­சி­யும் அவ­சி­யம் என்­றா­லும் இவற்றை அள­வாக செய்து நமக்கு சோர்வு வரா­த­படி பார்த்­துக்­கொள்­ள­வேண்­டும்," என்று வருங்­கா­லத்­தில் மருத்­து­வர் ஆக விரும்­பும் ருஷில் கூறி­னார்.

கணக்­குப் பாடத்­தின் தொடக்­கத்­தில் சரா­சரி நிலை மதிப்­பெண்

­க­ளைப் பெற்று இறு­தி­யில் சாதா­ரண நிலை தேர்­வில் சிறப்­புத் தேர்ச்சி வாங்­கி­யது குறித்து மகிழ்ச்சி அடைந்­த­தாக அதே பள்­ளி­யைச் சேர்ந்த பாஸ்­கர் ஸ்ருதி, 16, தெரி­வித்­தார்.

உயர்­நிலை 1ல் வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்வி மாண­வ­ராக இருந்த ஸ்ருதி, கடு­மை­யாக உழைத்து விரை­வுநி­லைக்கு மாறி­னார். "விரைவு நிலை மாண­வி­யின் தரம் எனக்கு உள்­ளதாக நான் நம்­பி­னேன். நம்­பிக்­கை­யு­டன் செயல்­ பட்­டேன்," என்று வர்த்த ஆய்­வா­ள­ராக வருங்­கா­லத்­தில் இருக்க விரும்­பும் ஸ்ருதி கூறி­னார்.

இரு மாண­வர்­க­ளுமே பாடத்­தில் ஏற்­படும் சந்­தே­கங்­களை உட­னுக்­கு­டன் தீர்த்துக்கொள்ள முன்­வந்ததாக இவர்களின் தமிழ் ஆசி­ரி­யர் திரு அப்­துல் நசீர், 56, தெரி­வித்­தார்.

கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்