மூன்றாவது முயற்சியில் சிறகடித்துப் பறந்த அரிய வகை கழுகு

மூன்றாவது முயற்சியில் சிறகடித்துப் பறந்த அரிய வகை கழுகு

1 mins read
cadc0298-f24e-4967-a283-256676a98660
கழுகு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மண்டாய் வனவிலங்கு அமைப்பு தெரிவித்தது. படம்: தேசிய பூங்காக் கழகம் -

சிங்­கப்­பூ­ருக்­குப் பறந்­து­வந்த அரிய வகை கழு­கைப் பற­க்கவைக்க மேற்­கொள்­ளப்­பட்ட மூன்­றா­வது முயற்சி வெற்றி கண்­டது.

கழுகு கடந்த திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் சிற­க­டித்து விண்­ணைத் தொட்­டது.

இருப்­பி­னும், கழுகு தொடர்ந்து உன்­னிப்­பா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் என்று மண்­டாய் வன­வி­லங்கு அமைப்­பைச் சேர்ந்த நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 30ஆம் தேதி­யன்று ஃபேரர் சாலை­யில் அந்­தக் கழுகு பல­வீ­ன­மான நிலை­யில் கண்­டெ­டுக்­கப்பட்­டது. அதை தேசிய பூங்­காக் கழக அதி­கா­ரி­கள் காப்­பாற்­றி­னர்.

அதை­ய­டுத்து, அந்­தக் கழு­குக்கு ஜூரோங் பற­வைப் பூங்­கா­வில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு, அத­னைப் பலப்­ப­டுத்த தேவை­யான இரை கொடுக்­கப்­பட்­டது.

இதற்கு முன்பு அந்­தக் கழு­கைப் பறக்­க­வைக்க மேற்­கொள்­ளப்­பட்ட இரண்டு முயற்­சி­களும் தோல்­வி­யில் முடிந்­தன.

இம்­மா­தம் 4ஆம் தேதி­யன்று முதல் முயற்சி மேற்­கொள்­ளப்­

பட்­டது.

ஆனால் மேக­மூட்­ட­மாக இருந்­த­தால் கழுகு பறக்­க­வில்லை. இவ்­வகை பற­வை­கள் பறக்க ஒரு­வித வெப்­பக் காற்று தேவை என்று

நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

ஏறத்­தாழ அரை­மணி நேரத்­துக்கு நிபு­ணர்­கள் கழு­குக்கு உற்­சா­க­மூட்­டி­யும் இருந்த இடத்­தை விட்டு அது நகரவில்லை.

மறு­நாள் அக்­க­ழு­கைப் பறக்­க­வைக்க அதி­கா­ரி­கள் மீண்­டும் முயன்­ற­னர். இம்­முறை அது 50 மீட்­டர் தூரம் பறந்து அரு­கில் இருந்த திட­லில் தரை­யி­றங்­கி­யது.