கூகல் வழங்கும் உபகாரச்சம்பளம்

கூகல் வழங்கும் உபகாரச்சம்பளம்

2 mins read
86d7a2be-0671-4d8f-b03b-13c8858b4b99
-

இடைக்­கா­லப் பணி­மாற்­றத்­தில் ஈடு­பட விரும்பி, முன்­பின் அனு­ப­வ­ம் இல்லாத துறைக்கு மாறத் தயா­ராக இருப்­போ­ருக்கு தொழில்­நுட்­பத் துறை­யில் பல வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

தேவை அதி­கம் உள்ள மின்­னி­லக்­கத் திறன்­களை மேலும் 5,000 சிங்­கப்­பூ­ரர்­கள் கற்­றுக்­கொள்ள ஏது­வாகத் தொழில்­நுட்ப ஜாம்­ப­வா­னான கூகல் நிறு­வ­னம் உப­கா­ரச்­சம்­ப­ளத் திட்­டம் ஒன்றை அறி­

மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

திட்­டத்­தின் அறி­முக விழா­வில் திரு ஹெங் நேற்று கலந்­து­கொண்டு பேசி­னார். கொவிட்-19 நெருக்­க­டி­ நி­லை­யால் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் சில தொழில்­களும் வேலை­களும் தடைப்­படும் என்று திரு ஹெங் கூறி­னார்.

இருப்­பி­னும், புதிய துறை­களும் வேலை­களும் உரு­வா­கும் என்று பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங் தெரி­வித்­தார்.

"காலப்­போக்­கில் தொழில்­நுட்ப மேம்­பாட்­டின் கார­ண­மாகக் கூடு­த லான, மேலும் சிறப்­பான வேலை­கள் உரு­வா­கும் என நான் நம்­பு­கி­றேன்," என்­றார் துணைப் பிர­த­மர் ஹெங். கூக­லின் உப­கா­ரச்­சம்­ப­ளத் திட்­டத்­தின்­கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் பயிற்­சி­கள் இணை­யம் மூலம் நடத்­தப்­ப­டு­கின்றன. கூக­லைச் சேர்ந்த நிபு­ணர்­கள் அவற்றை உரு­வாக்­கி­யுள்­ளன. ஒவ்­வொரு பயிற்­சி­யும் மூன்று மாதங்­

க­ளி­லி­ருந்து ஆறு மாதங்­கள் வரை நீடிக்­கும். பயிற்­சி­களை முடிப்­போ­ருக்கு கூகல் வாழ்க்­கைத்­தொ­ழில் சான்­றி­தழ் வழங்­கப்­படும். தக­வல் தொழில்­நுட்ப ஆத­ரவு, திட்ட நிர்­வா­கம், தர­வுப் பகுப்­பாய்வு, பய­னீட்­டா­ளர் அனு­பவ வடி­வ­மைப்பு ஆகிய நான்கு பிரி­வு­க­ளுக்கு உப­கா­ரச்­சம்­ப­ளத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம். உபகாரச்சம்பளங்களின் மொத்த மதிப்பு $3 மில்லியன்.

கூகலின் உபகாரச்சம்பளத் திட்டத்தின் அறிமுக விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (இடது)

கலந்துகொண்டார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்