மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டு

மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டு

2 mins read
a70252b8-9b17-4829-8a9a-73538752f73f
-

மனை­வி­யைக் கொன்­ற­தாக 33 வயது சாவ் குவோக் ஹன் டேவிட் பிரா­யன் மீது நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அங் மோ கியோ ஸ்தி­ரீட் 23ல் உள்ள வீட்­டில் தமது மனை­வி­யான 30 வயது இசபெல் எலி­ச­பெத் ஃபிரான்­சிஸை அவர் கொன்­ற­தாக நம்­பப்­ப­டு­கிறது. கொலைக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­ட­னை­யு­டன் பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

பெண் ஒரு­வர் கத்­தி­யால் குத்­தப்­பட்­ட­தாக நேற்று முன்­தி­னம் காலை 7.35 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது. சம்­பவ இடத்­துக்கு விரைந்த அதி­கா­ரி­கள் பெண் ஒரு­வர் அந்த வீட்­டில் சுய­நி­னை­வின்றி கிடந்­த­தைக் கண்­ட­னர்.

அவர் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. காய­ம­டைந்த சாவ் மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். நேற்று முன்­தி­னம் காலை 7 மணி அள­வில் அல­றல் சத்­தம் கேட்டு தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்­த­தாக மாண்ட பெண்­ணின் அண்டை ­வீட்­டுக்­கா­ர­ரான திரு­வாட்டி

விவி­யன் கூறி­னார்.

தமது மக­ளைப் பாலர் பள்­ளிக்கு அனுப்ப கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் கழித்து கீழே இறங்­கி­ய­

போ­து­தான் குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­துக்­குக் கீழே காவல்­து­றை­யி­னர் இருப்­ப­தைக் கண்­ட­தாக அவர் கூறி­னார். மனை­வி­யைக் கொலை செய்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஆட­வர் கைது செய்­யப்­பட்ட

விவ­ரம் பிற­கு­தான் தமக்­குத் தெரி­ய­வந்­த­தாக திரு­வாட்டி விவி­யன் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பகு­தி­நேர மாண­வ­ராக இருக்­கும் ஒரு­வர், கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் திரு­வாட்டி ஃபிரான்­சி­ஸைச் சந்­தித்­த­தா­கத் தெரி­வித்­தார். அவர் தமது பெய­ரைத் தெரி­விக்க மறுத்து­ விட்­டார்.

திரு­வாட்டி ஃபிரான்­ஸி­சும் தாமும் ஒன்­றாக 'ஜுரிஸ் டாக்டர்' சட்­டத்­துறை பட்­டக் கல்­வி­யில் பயின்­ற­தாக அவர் தெரி­வித்­தார்.

"அவர் மகிழ்ச்­சி­யாக இருந்­தார் என நினைத்­தேன். கடந்த ஆண்டு அவர் தமது வீட்­டைப் புதுப்­பித்து குடி­பு­குந்­தார்.

"இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு கரு­வுற்­றி­ருப்­ப­தாக அவர் என்­னி­டம் கூறி­னார். குழந்தை இவ்­வாண்டு நடுப்­ப­கு­தி­யில் பிறக்­கும் என்று அவர் தெரி­வித்­தார். அதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்­தேன்.

"அவர் பேச்­சாற்­றல் மிக்­க­வர். எப்­போ­தும் சுறு­சு­றுப்­பு­டன் இருப்பார். கல்­வி­யில் சிறந்து விளங்கினார்," என்று அந்த நண்­பர் கூறி­னார். கடந்த ஆண்டு சந்­தைப்­ப­டுத்­தல் வேலை­யில் திரு­வாட்டி விவி­யன் சேர்ந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

கொலை நடந்­த­தா­கக் கூறப்­படும் வீட்­டுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் நேற்று சென்­ற­போது வீட்­டுக்கு வெளியே தரை­யில் ரத்­தக் கறை­க­ளை­யும் ரத்­தக் கறை­க­ள் படிந்த பாதச்

சுவ­டுக­ளை­யும் அவர்­கள் கண்­ட­னர்.