சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் முகக்கவசம் இல்லாமல் இருந்ததற்காக பிரிட்டனைச் சேர்ந்த மொக்ரிட்ஜ் ஃபிலிப் ரிச்சர்ட் மீது கடந்த மாதம் குற்றம் சுமத்தப்
படுவதாக இருந்தது. ஆனால் குற்றச்சாட்டு பதிவாகிய நாளன்று அவர் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.
இதையடுத்து, அவருக்கு எதிராக நேற்று முன்தினம் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று 54 வயது மொக்ரிட்ஜ் தடுத்துவைக்கப்பட்டு காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகின. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று இரவு 10.15 மணி அளவில் செங்காங் எம்ஆர்டி நிலையத்திலும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று இரவு 10.50 மணி அளவில் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்திலும் அவர் முகக்
கவசம் அணியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று இரவு 8.50 மணி அளவில் 180 கிச்சனர் சாலையில் மொக்ரிட்ஜ் முகக்
கவசம் அணியாமல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான மொக்ரிட்ஜ், நேற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இடத்தில் முகக்கவசம் அணிந்திருந்தார்.
இந்த வழக்கு இம்மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

