மாரிஸ் ஸ்டெல்லா ஹாய் பள்ளிக்கு அருகே வியாழக்கிழமை (ஜனவரி 13) காலை, ஒரு மெர்சடீஸ்-பென்ஸ் கார் தீப்பிடித்து வெடித்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.
பார்ட்லி சாலை வழி பள்ளியை நோக்கி வந்துகொண்டிருந்தபோது காரில் கருகும் வாடை அடிப்பதை உணர்ந்த வாகன ஓட்டுநர், தம்முடைய மகனுடன் வாகனத்திலிருந்து வெளியேறினார்.
(காணொளியை இங்கே பார்க்கவும்)
வெளியேறி உதவி கேட்டுக்கொண்டிருந்தபோது வாகனம் தீடீரென்று தீப்பிடித்ததாக ஓட்டுநரான திருமதி குவெக் கூறினார்.
பள்ளியின் பாதுகாப்பு அதிகாரி தீயணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றபோதும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
சிறிது நேரத்துக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

