வெளிநாட்டவருக்காக தரைவீடு வாங்கிய மாதுக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை

வெளிநாட்டவருக்காக தரைவீடு வாங்கிய மாதுக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை

2 mins read
678e0c79-5234-4767-84cb-6db7ae3046ab
வெளிநாட்டினர் மூன்று பேருக்காக தமது பெயரில் தரை வீடுகளை வாங்கிய சிங்கப்பூரருக்கு இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.   -

வெளிநாட்டினர் மூன்று பேருக்காக தமது பெயரில் தரை வீடுகளை வாங்கிய சிங்கப்பூரருக்கு இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சொங் ஃபான்ரோங் என்ற அந்த 49 வயது மாது,குடியிருப்புச் சொத்துச் சட்டத்தை மீறிய ஒரு குற்றச்சாட்டை முன்னதாக ஒப்புக்கொண்டார்.

வியாழக்கிழமை (ஜனவரி 13) அன்று தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர் மீதான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த 2014ஆம் ஆண்டில், பெல்கிரேவியா வில்லாஸ் எனும் குடியிருப்புப் பகுதியில் தரை வீடுகளை வாங்க சீனாவைச் சேர்ந்த மூவருக்கு சொங் துணைபோனார்.

வீடுகள் சொங்கின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அவற்றை வாங்குவதற்கான பணத்தை அந்த மூன்று சீன ஆடவர்களை வழங்கினர்.

அவர்களில் ஒருவரான வாங் என்பவர் சிங்கப்பபூருக்குக் குடியேற விரும்புவதை அறிந்த சொங், அவருக்குத் தரை வீடு வாங்குமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

தனது பெயரில் முதலில் வீடு வாங்கி, பின்னர் வாங் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற பிறகு பத்திரங்களை மாற்றிக்கொள்ளலாம் என சொங் சொன்னதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற சோங், நொடித்துப்போனவர் என்று அறிவிக்கப்பட்டவர்.

குடியிருப்புச் சொத்துச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டினருக்காகச் சிங்கப்பூரர்கள் தங்கள் பெயரில் வீடு வாங்க அனுமதி இல்லை.

அத்துடன் அந்தச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூரில் தரை வீடு வாங்க விரும்பும் வெளிநாட்டவர் அரசாங்க அனுமதி பெறவேண்டும்.

சட்டத்தை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூவாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.