பதிவுபெற்ற முதல் மின்னிலக்க மருந்துக் கடை தொடக்கம்

'ஹைஃபன்ஸ் ஃபார்மா' மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் முதல் மின்­னி­லக்க மருந்­துக் கடையைத் தொடங்கி உள்ளது.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் அது பதி­யப்­பட்டு உள்ளது. 'வெல்­அவே' எனப்­படும் அந்த மருந்­துக் கடை மின்­னி­லக்கத் தள­மா­கச் செயல்­படும்.

அதில் பதிந்­து­கொண்டு இருக்­கும் மருத்­து­வர்­கள், மின்­னி­லக்க வழி­யாக நோயா­ளி­க­ளுக்கு மருந்து­க­ளைப் பரிந்­து­ரைப்­பார்­கள். மூன்றே மணி நேரத்­தில் மருந்து நோயா­ளி­யின் வீட்­டுக்கு வரும்.

இந்த மின்­னி­லக்­கச் சேவை நோயா­ளி­க­ளுக்கு இல­வ­ச­மாக கிடைக்­கும். அதைப் பயன்­படுத்தும் மருத்­து­வர்­கள் பெயர் அளவிலான ஒரு கட்­ட­ணத்­தைச் செலுத்த வேண்­டும்.

வெல்அவே மருந்துக் கடைக் கான உரிமத்தை 2021 ஜனவரியில் ஆணையம் வழங்கியது.

இந்த ஆண்டு முடி­வி­ல் 1,000 மருந்­த­கங்­கள் இந்த மின்­னி­லக்கச் சேவை­யில் சேர்ந்­து­கொள்­ளும் என்­றும் பரிந்­து­ரைக்­கப்­படும் மருந்து­கள் அன்­றா­டம் ஏறக்­குறைய 30 நோயா­ளி­க­ளுக்கு அனுப்­பப்­படும் என்­றும் இந்த நிறு­வ­னம் எதிர்­பார்க்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!