டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி: பிப்ரவரி 1 வரைதான் காலக்கெடு

டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி: பிப்ரவரி 1 வரைதான் காலக்கெடு

2 mins read
6034a4f6-d994-4b88-be03-6b94ffdf9d9b
-

டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள் கொவிட்-19க்கு எதி­ராக வரும் பிப்­ர­வரி 1ஆம் தேதிக்­குள் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­க­வேண்­டும். இதற்­கான காலக்­கெடு நீட்­டிக்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இருந்­தா­லும், வாகன ஓட்­டு­நர்­கள் தாங்­கள் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வரை தங்­கள் வேலை உடன்­பா­டு­க­ளைத் தற்­காலி­க­மாக நிறுத்திவைக்க ஏது­வாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் சேர்ந்து செயல்­பட்டு டாக்சி நிறு­வ­னங்­கள் ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளன.

போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் ஃபேஸ்புக்­கில் நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

முழு­மை­யாக தடுப்­பூசி போட்டுக்­கொள்ள பிப்­ர­வரி 1ஆம் தேதிக்குப் பிற­கும் கால­அ­வ­கா­சம் தேவைப்­படக்­கூ­டிய வாகன ஓட்­டு­நர்­க­ளின் நிதிச் சுமை குறைய இந்த ஏற்­பாடு உத­வும் என்று டாக்­டர் கோர் குறிப்­பிட்­டார்.

தங்­க­ளு­டைய உடன்­பா­டு­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கும் வாகன ஓட்­டு­நர்­கள், அப்­படி நிறுத்தி வைக்­கும் காலத்­திற்­கான வாட­கை­யைச் செலுத்த வேண்­டியதில்லை,

சிங்­கப்­பூ­ரில் முழு­நே­ர­மா­கப் பணி­யாற்­றும் ஏறத்­தாழ 66,500 டாக்சி மற்­றும் தனி­யார் கார் ஓட்டு­நர்­களில் 99 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை முழு­மை­யாகப் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

அவர்­களில் முக்­கால்­வா­சிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கூடு­தல் தடுப்­பூசி­யைப் (பூஸ்­டர்) போட்­டுக்­கொண்டு உள்­ள­னர். இன்­ன­மும் ஏறக்­கு­றைய 300 ஓட்­டு­நர்­கள்­தான் குறைந்­த­பட்­சம் ஓர் ஊசி­யைக்கூட போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கி­றார்­கள்.

முழு­மை­யாக தடுப்­பூ­சியை போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே பிப்­ர­வரி 1ஆம் தேதிக்­குப் பிறகு வேலை­யி­டத்­துக்குத் திரும்ப முடி­யும் என்று அர­சாங்­கம் டிசம்­ப­ரில் அறி­வித்­தது.

இந்­தக் காலக்­கெ­டுவை பிப்­ர­வ­ரிக்குப் பிறகு நீட்­டிக்­கும்­படி டாக்சி, வாட­கைக் கார் ஓட்­டு­நர் சங்­கங்­கள் கோரிக்கை விடுத்­த­ன.