பொசுங்கிய வாடை: புதர் தீயோ, ஆலை விபத்தோ காரணமல்ல

பொசுங்கிய வாடை: புதர் தீயோ, ஆலை விபத்தோ காரணமல்ல

1 mins read
754f3c9e-01dd-4748-a6a1-acb6f169170e
-

சிங்­கப்­பூ­ரில் கிழக்­குப் பகு­தி­யில் வசிப்­போர் கடந்த செவ்­வாய், புதன்­கி­ழ­மை­களில் ஏதோ பொசுங்­கு­வது போல் வாடை வந்­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

ஆனால் அந்­தப் பகு­தி­யில் வெப்­பம் கார­ண­மாக புதர் தீ மூண்­ட­தா­கவோ தொழிற்­சா­லை­களில் விபத்து நிகழ்ந்­த­தா­கவோ தெரி­ய­வில்லை என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது.

புதன்­கி­ழமை பிற்­ப­க­லுக்­குப் பிறகு யாரும் அது­போன்ற புகார் எதை­யும் தெரி­விக்­க­வில்லை என்றது வாரி­யம். இருந்­தா­லும் சூழ்நி­லை­யைத் தான் தொடர்ந்து கண்­கா­ணித்­து­ வ­ரப்­போ­வ­தா­க­வும் அது கூறி­யது.

அந்த வாடையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தொழில்­துறை விபத்து எது­வும் அந்­தப் பகு­தி­யில் நிக­ழ­வில்லை என்­பது இந்த வாரி­யம் நடத்­திய சோத­னை­கள் மூலம் தெரி­ய­வந்­தது.

கிழக்­குப் பகு­தி­யில் புதர் தீ பற்­றி தகவல் இல்லை என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.