மாற்றுத் தடுப்பூசி பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு

மாற்றுத் தடுப்பூசி பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு

1 mins read
e38c8246-2531-423f-9aed-b8d539f937c0
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­களை மாற்றிப் போடு­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் பற்றி சிங்­கப்­பூ­ரில் உள்ள ஆய்­வா­ளர்­கள் ஆராய்ந்து வரு­கி­றார்­கள்.

தேசிய தடுப்­பூசித் திட்­டத்­தில் இடம்­பெ­றாத ஊசி மருந்து களை ஈடுபடுத்தியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தடுப்­பூ­சியை மாற்றிப் போடு­வதால் நோய் தடுப்­பாற்­ற­லில் எந்த அள­வுக்கு விளைவு ஏற்­படும் என்­பதைக் கண்­டு­பி­டிப்­பது அவர்­க­ளின் இலக்கு.

கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) உட்­பட ஒரே தடுப்­பூ­சியை மூன்று முறை போடு­வ­தால் ஏற்­ப­டக்­கூடிய விளை­வு­களும் ஒரே தடுப்­பூ­சியை இரு முறை போட்டு கூடு­தல் தடுப்­பூ­சி­யாக வேறு ஒரு நிறு­வ­னத்­தின் தடுப்­பூசி மருந்தைச் செலுத்­து­வ­தால் ஏற்­படக்­கூ­டிய விளை­வு­களும் எப்படி இருக்­கும் என்­பதை ஆய்­வா­ளர்­கள் ஒப்­பிட்டுப் பார்ப்­பார்­கள்.

ஆய்வு பற்­றிய விவ­ரங்­கள் அமெ­ரிக்­கா­வின் தேசிய மருந்து நூல­கத்­தில் சேர்க்­கப்­பட்டுள்ளன.

உல­கின் ஆகப் பெரிய அந்த நூல­கத்­தில் மருந்­தக ஆய்­வு­கள் பற்­றிய விவ­ரங்­கள் நிறைந்து இருக்­கின்­றன.

ஏ*ஸ்டார், டியுக்-என்­யு­எஸ், கேகே மாதர் சிறார் மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து டான் டோக் செங் மருத்­து­வ­மனை சிங்­கப்­பூர் ஆய்­வா­ளர்­கள் நடத்­தும் இந்த ஆய்­வுக்கு நிதி ஆ­த­ரவு வழங்­கு­கிறது.

ஆய்­வுக்குத் தொற்­று­நோய்­களுக்­கான தேசிய நிலை­யத்­தைச் சேர்ந்த டாக்­டர் பார்­னாபே யோங் தலைமை வகிக்­கி­றார். அதில் 21 வயது மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள ஏறத்­தாழ 600 பேர் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.