பரிசோதித்துப் பார்க்க ஓட்டுநர் இல்லாத 50 வாகனங்கள் அனுமதி

பரிசோதித்துப் பார்க்க ஓட்டுநர் இல்லாத 50 வாகனங்கள் அனுமதி

1 mins read
ed974aa3-afc1-4fc1-8bc2-14a26128306e
-

சிங்­கப்­பூ­ரில் தானி­யங்கி வாகனப் பரி­சோ­தனை நிலை­யம் 2016ல் திறக்­கப்­பட்­டது. அது முதல் 40க்கும் மேற்­பட்ட ஓட்­டு­நர் இல்­லாத வாக­னங்­கள் பரி­சோ­திக்­கப்­பட்டு சிங்­கப்­பூர் சாலை­களில் பரிசீலித்துப் பார்க்க அங்கீ காரம் வழங்­கப்­பட்டு உள்­ளது.

ஓட்­டு­நர் இல்­லாத டாக்­சி­கள், இடை­வழி சிறு பேருந்­து­கள், பேருந்து­கள், சாலை­களைத் துப்­பு­ரவு செய்­யும் வாக­னங்­கள் ஆகி­யவை அத்­தகைய ஓட்­டு­நர் இல்­லாத வாக­னங்­களில் உள்­ள­டங்­கும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்துள்ளது.

தானி­யங்கி வாகன உன்­னதப் பரி­சோ­தனை ஆய்வு நிலை­யம்-நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­கழகம் அந்த வாக­னங்­க­ளுக்­குச் சான்­றி­தழ் அளித்­துள்­ளது.

இதர பத்து வாக­னங்­கள் பொது வழி­களில் செயல்­படும் வகை­யில் அந்த அங்­கீ­கா­ரத்­தைப் பெற்றுள்ளன.

உண­வுப்­பொ­ருள்­கள், சாத­னங்­களைக் கொண்டு கொடுப்­பது, மேற்­பார்­வை­யி­டு­வது போன்ற பணி­களை அத்­த­கைய வாக­னங்­கள் செய்­யும்.

அர­சும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க­மும் 2017ல் தானியங்கி வாகனப் பரி­சோ­தனை நிலை­யத்தை அமைத்­தன. அங்கு அத்­த­கைய வாக­னங்­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­கின்­றன. சாலை­களில் சேவை­யில் ஈடு­படுத்­தப்­பட்டு அவற்றைப் பரி­சோதிக்க முடி­யுமா என்­ப­தற்­கான சான்­றி­தழை அந்த நிலை­யம் வழங்­குகிறது.

பேருந்­து­களை உட்படுத்தி மேலும் பல பரி­சோ­த­னை­களை நடத்­த ஏற்­கெ­னவே திட்­டங்­கள் இருப்­ப­தாகத் தெரிகிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் தானி­யங்கி வாகனக் கண்­காட்சி நேற்று தொடங்­கி­யது. அத் தகைய வாகனங்களுக்குச் சிங்கப்பூர் எப்படி தயாராகிறது என்பதை அதில் தெரிந்துகொள்ளலாம்.