வாடிக்கையாளர்கள் பாதிப்பு

வாடிக்கையாளர்கள் பாதிப்பு

3 mins read
08677c8e-3be9-4760-841b-fb395c9138a5
-

தொழில்நுட்பக் கோளாறால் தடைபட்ட 'விடிஎல்' பேருந்துப் பயணச்சீட்டு விற்பனை

தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) சிங்­கப்­பூர் - ஜோகூர் பாரு இடை­யி­லான பேருந்­துப் பய­ணச்­சீட்­டு­களை வாங்க பல­ரும் முண்டி­யடித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் தங்­க­ளது பய­ணச்­சீட்­டு­களை ரத்து செய்­த­தா­லும் தொழில்­நுட்­பக் கோளா­றா­லும் பய­ணச்­சீட்டு விற்­பனை நேற்று முன்தினம் தடை­பட்­டது.

'விடி­எல்' திட்­டத்­தன்­கீழ் பிப்­ர­வரி 10 முதல் 28ஆம் தேதி வரைக்கு­மான பய­ணச்­சீட்­டு­கள் விற்­ப­னையை சிங்­கப்­பூ­ரின் 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னம் 'ஷாப்பி' மெய்­நி­கர்க் கடை வழி­யா­க­வும் நேற்று முன்தினம் தொடங்­கி­யது.

இதற்­கு­முன் ஒரு நேரத்­தில் ஒரு நாளுக்­கான பய­ணச்­சீட்­டு­களை அந்­நி­று­வ­னம் விற்­று­வந்­தது. இந்­நி­லை­யில், இம்முறை 19 நாள்­களுக்கு­மான பய­ணச்­சீட்­டு­களை ஒரே நாளில் அது வெளி­யிட்­டது.

மக்­கள் சிறந்த முறை­யில் தங்­களது பயண, விடுப்பு ஏற்­பா­டு­களைத் திட்­ட­மிட ஏது­வாக இப்­படி 19 நாள்­க­ளுக்­கான பய­ணச்­சீட்­டு­கள் விற்­பனை தொடங்­கப்­பட்­டது என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யப் பேச்­சா­ளர் விளக்­க­ம­ளித்­தார்.

ஆனால், நேற்று விற்­பனை தொடங்­கி­ய­தும் சிலர் தங்­க­ளது பய­ணச்­சீட்­டு­களை ரத்து செய்­த­தால், பய­ணச்­சீட்டு வாங்க ஆர்­வம் காட்­டிய மற்ற வாடிக்­கை­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இது­கு­றித்து வாடிக்­கை­யா­ளர் சேவை மற்­றும் சமூக ஊட­கங்­கள் வழி­யா­கத் தனக்­குத் தக­வல் கிடைத்­த­தாக 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னம் கூறியது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பெற ஷாப்பி மின்­வ­ணி­கத்­த­ளம் பயன்­ப­டுத்­திய இணைய­வழிப் படி­வமே தடங்­க­லுக்­குக் கார­ணம் எனக் கண்­ட­றி­யப்­பட்­டது.

அதி­க­மா­னோர் அத­னைப் பூர்த்தி­செய்து, தாக்­கல் செய்­த­தால் அப்­ப­டி­வம் அப்­ப­டியே நிலை­குத்தி நின்­று­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இத­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­களது விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பிக்க முடி­யா­மல் போனது.

இதன் கார­ண­மாக, பய­ணி­களைப் பற்­றிய விவ­ரங்­கள் இல்­லாத முன்­ப­தி­வு­கள் 30 நிமி­டங்­களுக்­குப் பின்­னர் தானா­கவே ரத்து செய்­யப்­பட்­டு­விட்­டன.

அதன்­பின் அப்­ப­டி­வம் படிப்­ப­டி­யாக மீண்டும் செயல்­பாட்­டிற்கு வந்த பிற­கும், வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் தங்­க­ளது முன்­ப­தி­வு­களை ரத்து செய்­த­தாக 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து, நம்­ப­க­மான தீர்வு கண்­டு­பி­டிக்­கப்­ப­டும்­வரை ஷாப்பி இணை­யத்­த­ளம் மூலம் பய­ணச்­சீட்டு விற்­கப்­ப­டு­வது தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டுள்ளது.

இந்­தத் தடங்­க­லுக்­காக மன்­னிப்பு கேட்­டுக்­கொண்ட 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னம், பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பணம் திருப்­பித் தரப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர்-மலே­சியா இடை­யிலான தரை­வழி 'விடி­எல்' திட்­டத்­தின்­கீழ் 'காஸ்வே லிங்க்', 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிறு­வ­னங்­கள் மட்­டுமே பேருந்து சேவை­களை இயக்கி வரு­கின்­றன.

பிப்­ர­வரி 27 அன்று ஜோகூ­ரில் இருந்து சிங்­கப்­பூர் திரும்­பு­வதற்­காக ஷாப்பி இணை­யத்­த­ளம் வழி­யாக வாங்­கிய பய­ணச்­சீட்டு ரத்து செய்­யப்­பட்­டு­விட்­ட­தால், தாமும் தம் கண­வ­ரும் ஜோகூ­ரில் உள்ள தங்­களின் ஒரு வயது மகனை நேரில் சென்று பார்க்­கும் திட்­டம் இப்போது நிறை­வே­றா­மல் போய்­வி­ட­லாம் என்று கவலை தெரி­வித்­தார் நிர்­வா­கி­யாகப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி ஓங் யியின், 29.

இதன் தொடர்­பில் வாடிக்­கை­யா­ளர் சேவை­யைப் பெற பல­முறை தொடர்­பு­கொண்­டும் தமக்­குப் பதில் வர­வில்லை என்று திரு­வாட்டி யியின் சொன்­னார்.

"பணத்­தைத் திருப்­பித் தரு­வ­தற்­கா­கப் பதி­லா­கப் பய­ணச்­சீட்­டைக் கொடுங்­கள்," என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனப் புத்­தாண்டை ஒட்டி, 'விடி­எல்' பேருந்­துப் பய­ணச்­சீட்­டு­க­ளைப் பெற பெரும் போட்டி நில­வு­கிறது. பிப்­ர­வரி 2வது வாரத்­திற்­கான ஏறத்­தாழ 7,500 நுழை­வுச்­சீட்­டு­கள் அரை­மணி நேரத்­தில் விற்­றுத்­தீர்ந்தன.