மீண்டும் தலையெடுக்கும் மின்பணப்பை ‘மோசடி’

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் இருந்து, குறைந்­தது 1,200 மோசடி சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன. ‘இ-வோலட்’ எனப்­படும் மின்­பணப்பை விண்­ணப்ப மோசடி போன்­ற­தொரு மோசடி மீண்­டும் தலை­யெ­டுத்­துள்­ள­தா­கக் காவல்­துறை தெரி­வித்­துள்ளது.

வாட்ஸ்­அப், வைபர், ஐஎம்ஓ போன்ற குறுஞ்­செய்­திச் செய­லி­கள் மூலம் அழைத்து, எதிர்­முனை­யில் இருப்­போ­ரி­டம் இருந்து பெற்ற தக­வல்­க­ளைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் மின்­ப­ணப்­பை­களுக்கு விண்­ணப்­பம் செய்­வர்.

சிங்­கப்­பூர் காவல்­துறை அல்­லது மனி­த­வள அமைச்சு போன்ற அர­சாங்க அமைப்­பு­களில் இருந்து அழைப்­ப­தாக மோச­டிக்­கா­ரர்­கள் கூறு­வர்.

பெரும்­பா­லும் அவ்­வ­மைப்­பு­களின் அடை­யாள முத்­திரை அல்­லது அவ்­வ­மைப்­பு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளின் படங்­களை முகப்­புப் படங்­களை வைத்­தி­ருப்­பர். சிலர் காவல்­துறை அதி­காரி போன்ற சீரு­டையை அணிந்து, காணொளி வழி­யா­க­வும் தொடர்பு­கொள்­வர்.

விசா­ர­ணை­க­ளுக்கு உத­வும் நோக்­கில் சரி­பார்ப்­புக் கார­ணங்­களுக்­காக எதிர்­மு­னை­யில் இருப்­போ­ரி­டம் இருந்து தனிப்­பட்ட தக­வல்­கள், வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள், ஒற்­றைப் பயன்­பாட்டு மறைச்­சொல் போன்­ற­வற்றை அவர்­கள் கேட்­பர்.

அது­போன்ற அழைப்­பு­க­ளைப் புறக்­க­ணி­யுங்­கள் என்­றும் மோசடிக்­கா­ரர்­க­ளி­டம் தனிப்­பட்ட தக­வல்­க­ளை­யும் வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைத் தர வேண்­டாம் என்­றும் பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

மோசடி வங்­கிப் பரி­வர்த்­த­னை­கள் எது­வும் இடம்­பெற்­றால் அது­பற்றி 1800-255-0000 எனும் நேரடி அழைப்பு எண்­ணில் காவல்­து­றை­யைத் தொடர்­பு­கொள்­ளும்­படி அவர்­கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றனர்.

‘ஐவிட்­னஸ்’ இணை­யத்­த­ளம் வழி­யா­க­வும் அவர்­கள் தக­வல் தெரி­விக்­க­லாம்.

காவல்­துறை உதவி தேவைப்­படு­வோர் 999 என்ற எண்­ணில் அழைக்­க­லாம்.

மோசடிகள் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற ‘ஸ்கேம் அலெர்ட்’ இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடித் தடுப்பு எண்ணில் அழைக்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!