பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் 92.2 விழுக்காட்டினருக்கு வேலை

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் படிப்­ப­டி­யாக மீண்­டு­வ­ரும் சூழ­லில், கடந்த ஆண்டு பல­து­றைத் தொழிற்­கல்­லூரி­களில் இருந்து பட்­டம் பெற்­றோ­ருக்கு நல்ல வேலை­களும் ஊதி­ய­மும் கிடைத்­தன.

இங்­குள்ள ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­க­ளின் அண்­மைய 'பட்­ட­தாரி வேலை­வாய்ப்பு ஆய்வு' மூலம் இது தெரி­ய­வந்­துள்­ளது.

அப்­ப­ல­து­றைத் தொழிற்­கல்­லூரி­களில் கடந்த ஆண்டு பட்­டம் பெற்­றோ­ரில் 92.2 விழுக்­காட்­டி­னர் ஆறு மாதங்­க­ளுக்­குள் நிரந்­தர, தன்­னு­ரிமை அல்­லது பகு­தி­நேர வேலை தேடிக்­கொண்­ட­னர். முந்­திய 2020ஆம் ஆண்­டில் இவ்­விகி­தம் 87.4 விழுக்­கா­டாக இருந்­தது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் நிரந்­தர வேலை கிடைத்­தோ­ருக்கு இடை­நிலை மாத ஊதி­ய­மாக $2,400 வழங்­கப்­பட்­டது. அது 2021ஆம் ஆண்­டில் 2,500 வெள்ளி­யாக உயர்ந்­தது.

முந்­திய ஆண்­டு­க­ளைப் போலவே, சுகா­தார அறி­வி­யல், தக­வல், மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பப் பாடங்­களில் பட்­டம் பெற்­றோ­ருக்கு மற்ற துறை­யி­ன­ரைக் காட்­டி­லும் மேம்­பட்ட ஊதி­யம் கிட்­டி­யது.

பல­து­றைத் தொழிற்கல்­லூ­ரி­களில் 2021ல் பட்­ட­யம் பெற்ற 11,928 பேரில் 9,025 பேர் இந்­தக் கருத்­தாய்­வில் பங்­கெ­டுத்­த­னர். அத்­து­டன், 2018ல் பட்­டயம் பெற்று, அதன்­பின் ஈராண்­டு­கள் முழு நேர தேசிய சேவை­யில் ஈடு­பட்ட 5,191 பேரும் இதில் பங்­கேற்­ற­னர்.

மேம்­பட்ட இடை­நிலை ஊதி­யத்­து­டன் புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை கிடைத்­தி­ருப்­பது, நிறு­வனங்­கள் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிப் பட்­ட­தா­ரி­க­ளின் திறன்­கள்­மீ­தும் அறி­வாற்­றல்­மீ­தும் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யைக் காட்­டு­கிறது என்­றார் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் முதல்­வர் பீட்­டர் லாம்.

புதிய பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிப் பட்­ட­தா­ரி­களில் 58 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­நேர வேலை கிடைத்­தது.

2020ஆம் ஆண்­டில் இவ்விகிதம் 52 விழுக்­கா­டாக இருந்­தது.

கடந்த ஆண்டு மார்ச் முதல் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் உணவு, பான ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­க­வும் ஊட்­டச்­சத்­துத் தொழில்­நுட்­ப­ரா­க­வும் பணி­யாற்­றத் தொடங்­கி­னார் தெமா­செக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் செயல்­முறை உண­வி­யல் மற்­றும் ஊட்­டச்­சத்­துப் பாடப்­பி­ரி­வில் பட்­ட­யம்பெற்ற குமாரி சுவாதி சேகர், 21 (படம்).

அவ­ரது வேலை தேடும் பட­லம் ஓரிரு மாதங்­கள் நீடித்­தன. அத்­துறை­யில் உள்ள பொருத்­த­மான வேலை­வாய்ப்­பு­கள் குறித்த விவ­ரங்­களை அனுப்பி விரி­வு­ரை­யா­ளர்­கள் இரு­வர் இவ­ருக்கு உத­வி­னர்.

"நமது உடல் மட்­டு­மின்றி, மன­நலத்­திற்­கும் உண­விற்­கும் என்ன தொடர்பு என்­ப­தைப் பற்றி படிப்­பது புதி­தா­க­வும் என்னை ஈர்ப்­ப­தா­க­வும் இருந்­தது. 'கீட்டோ டயட்' போன்ற பல­வி­த­மான உண­வு­மு­றை­கள் குறித்­தும் அவற்­றின் நன்மை தீமை­கள் குறித்­தும் கற்­ற­றிந்­தேன்," என்­றார் குமாரி சுவாதி.

தற்­போது நோயா­ளி­க­ளுக்கு உண­வு­மு­றை­கள் குறித்து ஆலோ­சனை வழங்கி வரும் இவர், வெளி­நாட்­டில் மேற்­கல்வி பயி­ல­வும் விண்ணப்­பித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!