பாதுகாப்புக் கவசமின்றி பழுதுபார்ப்புப் பணி; சமூக ஊடகவாசிகள் கவலை

பாதுகாப்புக் கவசமின்றி பழுதுபார்ப்புப் பணி; சமூக ஊடகவாசிகள் கவலை

1 mins read
19f5f29a-414c-4b93-be94-8c9feafc90a3
பாதுகாப்புக் கவசம் அணியாமல் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆடவர். படம்: ஸ்டீவன் டேவிட்/ஃபேஸ்புக் -

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்பு ஒன்­றின் மேல்­த­ளத்­தில், பாது­காப்­புக் கவசம் அணி­யா­மல் தொழில்­நுட்பர் ஒரு­வர் குளி­ரூட்­டிக்­கான காற்று அழுத்­தி­யைப் பழு­து­பார்க்­கும் பணி­யில் ஈடு­பட்­டதை அறிந்து சமூக ஊட­க­வா­சி­கள் கவலை தெரி­வித்­துள்­ளார்.

'சிங்­கப்­பூர் ஹோம் டிஐ­ஒய்' ஃபேஸ்புக் பக்­கத்­தில் இம்­மா­தம் 11ஆம் தேதி இச்­சம்­ப­வம் தொடர்­பான படங்­கள் வெளி­யா­கின.

அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பின் 11 அல்­லது 12ஆம் தளத்­தில் உள்ள ஒரு வீட்­டின் வெளிப்­பு­றத்­தில், தாங்­குபலகை மீதுள்ள காற்று அழுத்தியின்மீது அந்த ஊழி­யர் அமர்ந்­தி­ருந்­ததை அப்­ப­டங்­கள் காட்­டின.

ஏதே­னும் அசம்­பா­வி­தம் நேர்ந்­தால் அந்த ஊழி­ய­ரின் உயி­ருக்கே அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­வி­ட­லாம் என்று ஃபேஸ்புக்­வாசி ஒரு­வர் கவலை தெரி­வித்­தி­ருந்­தார்.

தங்­க­ளது வீடு­களில் குளி­ரூட்டி பழுது­பார்க்­கும் பணிக்­காக ஒப்­பந்­த­தா­ரர்­களை ஈடு­ப­டுத்­தியபோ­தும் இது­போன்று ஊழி­யர்­கள் பாது­காப்­புக் கவசம் அணி­யா­மல் வேலை­செய்­த­தா­கப் பல­ரும் குறிப்­பிட்­டு இ­ருந்­த­னர்.

இச்­சம்­ப­வம் குறித்து மனி­த­வள அமைச்சை அணு­கி­ய­போது, அது கருத்­து­ரைக்க மறுத்­து­விட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

அதே நேரத்­தில், பணி­யின்­போது உய­ரத்­தில் இருந்து கீழே விழுந்­த­தி­னால் ஏற்­பட்ட உயி­ரு­டற்­சே­தம் குறித்த புள்ளி­வி­வ­ரங்­களை அமைச்சு வழங்­கி­யது.

கடந்த ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை­யி­லான கால­கட்­டத்­தில், உய­ரத்­தில் இருந்து விழுந்த 35 சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. 2020ஆம் ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் இது­போன்ற 32 சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

கடந்த ஞாயிறன்று சைனாடவுன் பாயின்ட் நீர்க்கசிவுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 28 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர், 4ஆம் தளத்திலிருந்து 2ஆம் தளத்தில் விழுந்துவிட்டார்.