கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பிப்ரவரி 4 முதல் 8 வரை மாணவர் சேர்க்கைப் பதிவு

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பிப்ரவரி 4 முதல் 8 வரை மாணவர் சேர்க்கைப் பதிவு

1 mins read
97e48619-57f7-4650-a567-8051048127ef
-

கல்வி அமைச்சு நடத்­தும் 50 பாலர் பள்­ளி­களில் 2023ஆம் ஆண்­டிற்­கான மாண­வர் சேர்க்­கைப் பதிவு இடம்­பெ­றும் தேதி­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்த ஆண்டு புதி­தா­கத் திறக்­கப்­ப­ட­வுள்ள ஏழு புதிய பாலர் பள்­ளி­களும் அவற்­றில் அடங்­கும்.

வரும் பிப்­ர­வரி மாதம் 4ஆம் தேதி காலை 9 மணி­யில் இருந்து 8ஆம் தேதி மாலை 4 மணி­ வரை மாண­வர் சேர்க்­கைப் பதிவு இடம்­பெ­றும்.

2018 ஜன­வரி 2ஆம் தேதி முதல் 2019 ஜன­வரி 1ஆம் தேதிக்­குள் பிறந்த குழந்­தை­கள் சேர்க்­கைப் பதி­விற்­குத் தகு­தி­பெ­று­வர். அவர்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­க­ளாக இருக்க வேண்­டும்.

கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி இணை­யத்­த­ளம் வழி­யாக இந்­ந­ட­வடிக்கை நடத்­தப்­படும். முடி­வு­கள் மார்ச் 31ஆம் தேதி வெளி­யி­டப்­படும்.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக அந்த பாலர் பள்­ளி­களில் பொது வர­வேற்பு நிகழ்ச்­சி­கள் இடம்­பெறாது என்­றும் அதற்­குப் பதி­லாக கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி இணை­யத்­த­ளத்­தில் மெய்­நி­கர் பொது வர­வேற்பு நிகழ்ச்சி நடத்­தப்­படும் என்­றும் அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

இம்­மா­தம் 29ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்­ப­கல் 12.30 மணி­வரை மெய்­நி­கர் பொது வர­வேற்பு நிகழ்ச்சி நடத்­தப்­படும்.

தனது பாலர் பள்­ளி­கள் அனைத்­தி­லும் தமிழ், சீனம், மலாய் ஆகிய மூன்று தாய்­மொ­ழிப் பாடங்­களும் வழங்­கப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

மாணவர் சேர்க்­கைப் பதிவு குறித்த கூடு­தல் தக­வல்­க­ளுக்கு https://www.moe.gov.sg/preschool/moe-kindergarten எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.