போட்டி பேரங்காடி மீது 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' தொடுத்த வழக்கு தள்ளுபடி

போட்டி பேரங்காடி மீது 'ஆல் இந்தியா சூப்பர்மார்க்கெட்' தொடுத்த வழக்கு தள்ளுபடி

4 mins read
a184894a-637d-414a-b674-d3ae7ecf338d
நோரிஸ் ரோட்டில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நான்கு மாடிக் கட்டடமாக 'ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்' செயல்பட்டு வருகிறது. -
multi-img1 of 2

கே.சி.விஜ­யன்

லிட்­டில் இந்­தியா பகு­தி­யில் உள்ள ஒரு பேரங்­காடி மீது 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்' எனப் பெயர்­கொண்ட பேரங்­காடி தொடுத்த வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. இதைத் தொடர்ந்து பதிப்­பு­ரி­மைச் சட்­டத்தை மீறி­விட்­ட­தாக தொடுக்­கப்­பட்­டி­ருந்த வழக்கை நீதி­மன்­றம் நிரா­க­ரித்­த­து­டன் 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்' எனப் பெயர் கொண்­டுள்ள அந்­தப் போட்டி பேரங்­காடி அதன் முத்­தி­ரை­யைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­த­வும் அனு­மதி அளித்­துள்­ளது.

இத­னு­டன் 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்' என்ற பெய­ரில் இருக்­கும் பதிவை நிரா­க­ரிக்­க­வும் அதன் பெயர்ப்­ப­ல­கை­யில் வர்த்­தக வடி­வில் காணப்­படும் '23' என்ற எண்­ணிக்­கையை நீக்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­யை­யும் நீதி­மன்­றம் நிரா­க­ரித்­துள்­ளது. மேலும், வர்த்­த­கத்­தில் போட்டி பேரங்­கா­டி­யான 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்', 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டு­வ­தைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி அதைப் போலவே தனது வர்த்­தக முத்­திரையை வடி­வ­மைத்து மேன்மை அடைய முயற்­சிப்­ப­தாக 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' கூறிய புகா­ரை­யும் உயர் நீதி­மன்ற நீதி­பதி வேலரி தியன் நிரா­க­ரித்­தார்.

"ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்­டின் பதிப்­பு­ரி­மை­யைச் சட்­ட­வி­ரோ­த­மாக இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட் மீறி­ய­தா­கக் கூறப்­ப­டு­வ­தை­யும் அதன் வர்த்­தக வடி­வத்­தைப் பயன்­ப­டுத்தி அது ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட் போல் செயல்­ப­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­வது நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை," என்று தனது தீர்ப்­பில் நீதி­பதி வேலரி தியன் கூறி­யுள்­ளார்.

அரு­க­ருகே செயல்­ப­டு­கின்றன

இந்த இரண்டு பேரங்­கா­டி­களும் 300 மீட்­டர் இடை­வெ­ளி­யில் லிட்­டில் இந்­தியா பகு­தி­யில் செயல்­படு­கின்­றன.

அத்­து­டன் இவை இரண்­டுமே இந்­தி­யக் கலா­சா­ரம், இந்­திய சமை­யல் பொருள்­களை விற்­பனை செய்­வ­து­டன் இந்­திய வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் குறி­வைத்து தங்­கள் வர்த்­த­கத்தை நடத்­து­வது இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது. 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' நோரிஸ் ரோட்­டில் உள்ள நான்கு மாடிக் கட்­ட­டத்­தில் செயல்­ப­டு­கிறது.

இங்கு பல்­வேறு மளி­கைப் பொருள்­கள், காய்­கறி வகை­கள், பழங்­கள், தனிப்­பட்ட முறை­யில் ஒரு­வர் பயன்­ப­டுத்­தும் பொருள்­கள் மற்­றும் வீட்­டிற்­குத் தேவை­யான பொருள்­களை விற்­கிறது.

அதன் ஆண்டு வரு­மா­னம், 2015ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­துக்­கும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் $54.8 மில்­லி­யன் ஆகும். அதன் ஒரு­நாள் வரு­மா­னம் சரா­ச­ரி­யாக $30,000 என­வும் மாதம் வரு­மா­னம் $1 மில்­லி­யன் என­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' பேரங்­காடி 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்­பர் வெல்ட் ரோட்­டில் செயல்­ப­டத் தொடங்­கி­யது.

கோரிக்­கையை அடுத்து புகார்

இதைக் கண்டு அதி­ருப்­தி­அடைந்த 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்' தனது வழக்­க­றி­ஞர்­கள் மூலம் 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' என்ற வர்த்­த­கப் பெயர், வர்த்­தக முத்­திரை போன்­வற்­றைப் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்­து­மாறு கோரி­யது.

இதற்கு 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்' மறுக்­கவே, 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட் பிரை­வேட் லிமி­டெட்­டும்' அதன் இயக்­கு­நர் பாஸ்­க­ரன் என்­ப­வ­ரும் 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' மீது வழக்­குத் தொடுத்­த­னர். 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்­டின்' நிறு­வ­னம் தங்­க­ளது பதிப்­பு­ரி­மையை மீறி­ய­து­டன் தங்­க­ளது வர்த்­த­கப் பெய­ரைப் பயன்­ப­டுத்­திப் பய­ன­டைந்­த­தா­க­வும் 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' குற்­றம் சுமத்­தி­யது.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி வேலரி தியன், அனைத்து சூழ்­நிலை­க­ளை­யும் பார்க்­கும்­போது 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' என்ற பெய­ரைப் பயன்­ப­டுத்­தி­ய­தால் 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­னம் தங்­கள் நிறு­வ­னத்­தைத் தவ­றா­கப் சித்­தி­ரித்­துப் பயன்­பெ­ற­வில்லை என்று தீர்ப்­ப­ளித்­தார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் குழப்­பம்

'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­ன­மும் தங்­க­ளைப் போலவே காய்­க­றி­கள், பழங்­கள் விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­வ­தா­லும் அங்­குள்ள காட்­சிப்­ப­டுத்­தும் அடுக்­கு­கள் ஒரே நிறத்­தில், ஒரே பெயர் கொண்­ட­தாக இருந்­த­தா­லும் வாடிக்­கை­யாளர்­கள் குழப்­பமடைந்து அதனால் மோசடி, தவ­றான சித்­தி­ரிப்பு நிகழ்ந்­துள்­ள­தாக 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' கூறி­யது.

'ஒற்­று­மை­க­ளை­விட வேறு­பா­டு­கள் நிறைய உள்­ளன'

இந்த வாதத்தை நிரா­க­ரித்த நீதி­பதி வேலரி தியன், இரண்டு நிறு­வ­னங்­க­ளின் பதிவு முத்­தி­ரை­யும் ஒன்­றாக இருப்­ப­தா­கக் கூறு­வதை 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­னம் நிரூ­பிக்­க­வில்லை என்று தமது தீர்ப்­பில் கூறி­னார்.

அத்­து­டன், 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­னத்­தின் வர்த்­த­கப் பதிவு முத்­திரை பொது­மக்­களின் குறிப்­பிட்ட பிரி­வி­ன­ரி­டையே தங்­க­ளது வர்த்­த­க­மும் 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­னத்­தின் வர்த்­த­க­மும் ஒன்­று­தான் எனத் திரித்­துக் கூறப்­பட்­டுள்­ள­தா­க­வும் அத­னால் குழப்­பம் ஏற்­ப­டக்­கூ­டும் என்­பதை 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' நிரூ­பிக்­கத் தவ­றி­விட்­ட­தா­க­வும் நீதி­பதி தமது தீர்ப்­பில் கூறி­யுள்­ளார். மேலும், இரு நிறு­வனங்­க­ளின் பதிப்பு முத்­தி­ரை­யும் ஒன்­றாக உள்­ளது என்­ப­தை­யும் 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­னம் நிரூ­பிக்­கத் தவ­றி­விட்­டதை நீதி­பதி சுட்­டி­னார்.

"ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது, ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட் நிறு­வ­னத்­தின் பதிவு முத்­திரை­யும் இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்­டின் பதிவு முத்­தி­ரை­யும் ஒன்­றா­கக் காட்­சி­ய­ளிப்­ப­தற்­குப் பதி­லாக அவற்­றுக்கு இடையே நிறைய வேறு­பா­டு­கள் இருக்­கின்­றன. அத்­து­டன், ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்­டின் பதிவு முத்­திரை குறிப்­பிட்­டுக் கூறும் அள­வுக்கு தனித்­து­வம் வாய்ந்து விளங்­கு­கிறது," என்று நீதி­பதி வேலரி தியன் குறிப்­பிட்­டார்.

மேலும் தமது தீர்ப்­பில் நீதி­பதி, "இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட் நிறு­வ­னம் தனது பொருள்­கள் ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்­டில் இருந்து வேறு­பட்­டது எனக் காண்­பிக்க எடுத்­துக்­கொண்ட முயற்­சி­க­ளை­யும் நான் கருத்­தில் கொள்­கி­றேன். இரண்டு நிறு­வ­னங்­க­ளின் வர்த்­த­கப் பெயர்ப்­ப­லகை, கடை முகப்பு ஆகி­ய­வை­யும் மாறு­பட்­டி­ருப்­பது நன்­றா­கத் தெரி­கிறது," என்று விளக்­கி­னார். இந்­தக் கார­ணங்­களால் தாம் இந்த வழக்கை தள்­ளு­படி செய்­வ­தா­கக் கூறிய நீதி­பதி 'ஆல் இந்­தியா சூப்­பர்­மார்க்­கெட்', 'இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட்' நிறு­வ­னத்­துக்கு வழங்க வேண்­டிய செல­வுத் தொகை குறித்த விசா­ரணை பின்­னா­ளில் நடத்­தப்­படும் என்­றும் தமது தீர்ப்­பில் தெரி­வித்­தார்.