தகுதிபெறாத மூன்று சீன நாட்டவருக்காக தரைவீடுகள் வாங்கிய சிங்கப்பூரருக்குச் சிறை

தகுதிபெறாத மூன்று சீன நாட்டவருக்காக தரைவீடுகள் வாங்கிய சிங்கப்பூரருக்குச் சிறை

2 mins read
bd8548fd-0c11-4f45-b104-03093b7ea481
-

தரை­வீ­டு­கள் வாங்­கத் தகு­தி­பெறாத­வர்­கள் என்று அறிந்­தி­ருந்­தும் மூன்று சீன நாட்­ட­வ­ருக்­கா­கத் தமது பெய­ரில் தரை­வீ­டு­கள் வாங்­கிய சிங்­கப்­பூ­ர­ருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சொங் ஃபான்ரோங் (படம்) என்ற அந்த 49 வயது மாது, குடி­யி­ருப்­புச் சொத்­துச் சட்­டத்­தின் கீழ் குற்­றம் புரிந்­ததை முன்­ன­தாக ஒப்­புக்­கொண்­டார்.

குடி­யி­ருப்­புச் சொத்­துச் சட்­டத்­தின் கீழ், வெளி­நாட்­டி­ன­ருக்­கா­கச் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் பெய­ரில் வீடு வாங்க முடி­யாது.

சொங்­குக்­குத் தண்­டனை விதிக்­கும்­போது, மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

'பெல்­கி­ரே­வியா வில்­லாஸ்' தரை­வீ­டு­களை 2014ஆம் ஆண்­டில் வாங்­கு­வ­தற்கு மூன்று சீன நாட்­ட­வருக்கு சொங் துணை­போ­னார்.

வீடு­கள் சொங்­கின் பெய­ரில் வாங்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அவற்றை வாங்­கு­வ­தற்­கான பணம் திரு வாங் சென், திரு லியூ குவோ­ஹுய், சென் சியாவ்பு ஆகிய அந்த மூன்று சீன ஆட­வர்­க­ளி­ட­மி­ருந்து வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அர­சாங்க ஒப்­பு­த­லு­டன் வெளி­நாட்­ட­வர் சொத்து வாங்­கு­வ­தற்­குச் சட்­டப்­படி முடி­யும்.

திரு வாங் சம்­பந்­தப்­பட்ட வழக்­கில் அவர் சிங்­கப்­பூ­ருக்­குக் குடி­யேற விரும்­பு­வதை அறிந்த சொங், தரை­வீடு வாங்க அவ­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தார்.

தனது பெய­ரில் முத­லில் வீடு வாங்கி, பின்­னர் வாங் சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்ற பிறகு பத்­தி­ரங்­களை மாற்­றிக்­கொள்­ள­லாம் என சொங் சொன்­ன­தாக நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.

முன்­னாள் பாலர் பள்ளி உரிமை­யா­ள­ரும் சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்­ற­வ­ரு­மான சொங், நொடித்­துப்­போ­ன­வர் என்று அறி­விக்­கப்­பட்­ட­வர்.

சட்­டத்தை மீறு­வோ­ருக்கு 10,000 வெள்ளி வரை அப­ரா­தம் அல்­லது மூவாண்டு சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.