விலைவாசி ஏற்றத்திலும் பொங்கும் மகிழ்ச்சி

கொவிட் சூழலும் மலேசியாவிலும் தமிழகத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த மழையும் இந்தப் பொங்கலை 'விலை கூடிய பொங்கலாக்கி' உள்ளன. மழை விளைச்சலைக் கெடுத்தது. விநியோகத்தை கொவிட் பாதித்துள்ளது. எந்தச் சூழலிலும் பண்பாட்டைப் பேணும் சிங்கப்பூர் தமிழ் மக்கள், பொங்கல் திருநாளை இன்று சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சக்தி மேகனா, பாவை சிவக்­கு­மார்

புதுப் பானை­யில் புத்­த­ரிசி போட்டு பால் பொங்கி, பொங்­கல் வைத்து தை முதல் நாளைக் கொண்­டா­டு­வது தமி­ழர் வழமை. பால் பொங்­கு­வது போல மகிழ்ச்­சி­யும் வள­மும் பொங்­கும் என்­பது தமிழ் மக்­க­ளின் நம்­பிக்கை.

வழி வழி­யா­கத் தொட­ரும் பாரம்­ப­ரி­யம் கொவிட் சூழ­லில் விடு­பட்டு விடக்­கூ­டாது என்று புதுப் பானை­யும் கரும்­பும் இஞ்சி மஞ்­ச­ளும் வாங்க நேற்று பல­ரும் லிட்­டில் இந்­தி­யா­வுக்கு விரைந்­த­னர்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் தொடர்ந்து பல தடை­களை ஏற்­ப­டுத்தி வந்­தா­லும், நம் பாரம்­ப­ரி­யத்தை விட்­டுக்­கொ­டுக்­கக் கூடாது," என்­றார் பொங்­க­லுக்­குப் பொருள் வாங்க நேற்று லிட்­டில் இந்­தியா வந்­தி­ருந்த திரு­மதி லட்­சுமி.

எந்­தச் சூழ­லி­லும் பண்­பாட்­டை­யும், பாரம்­ப­ரி­யத்­தை­யும் மற­வா­மல், தொடர்ந்து முடிந்­த­வ­ரைப் பொங்­க­லைக் கொண்­டாட விரும்­பு­வ­தாக திரு­மதி லட்­சு­மி­யைப் போலவே இன்­னும் பல­ரும் கூறி­னார்.

லிட்­டில் இந்­தி­யா­வின் பொங்­கல் கொண்­டாட்­டத்­தில் குதூ­க­லிப்­ப­தற்­கா­கவே நேற்று லிட்­டில் இந்­தியா வந்­தி­ருந்­தி­ருந்­தார் ரிபப்­ளிக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும் 18 வயது கே. ஹரிணி.

"பள்­ளிக்­குச் செல்­வ­தால் வீட்­டில் பெரி­தா­கக் கொண்­டாட முடி­யாது. பள்ளி முடிந்து வீட்­டுக்கு வந்து பொங்­கல் சாப்­பி­டு­வேன்," என்­றார் ஹரிணி.

கொட்டித் தீர்த்த மழையால்

கரும்பு, பூவுக்கு கிராக்கி

கரும்பு, இஞ்சி மஞ்­சள் கொத்து, மண் பானை­கள், வாழை­யிலை போன்ற பொருள்­கள் தமிழ்­நாட்­டி­லி­ருந்­தும் மலே­சி­யா­வி­லி­ருந்­தும் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

அண்­மை­யில் மலே­சி­யா­வி­லும் தமி­ழ­கத்­தி­லும் விடாது பெய்த அடை­மழை இந்த ஆண்டு விளைச்­ச­லைப் பெரி­தும் பாதித்து­ விட்­ட­தால் பொருள்­கள் கிடைப்­ப­தில் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. அத­னால் விலை­யும் கூடிள்­ளது. இதில் முக்­கி­ய­மாக பூவும் கரும்­பும் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­து என்றார் ஜோதி ஸ்டோர் புஷ்­பக் கடை­யின் திரு ராஜ்­கு­மார்.

கடந்த ஆண்டு ஒரு கரும்பு $4.00 முதல் $5.00 வரை விற்­கப்பட்டது. இந்த ஆண்டு $5.00லிருந்து $7.00 வரை உயர்ந்­தி­ருந்­தது. அதே­போல் ஒரு பந்து மல்­லி­கைச் சரம் வழக்­க­மான $8.00லி­ருந்து $12.00க்கும் மேல் அதிகரித்திருந்தது.

அதிகரித்துள்ள இறக்குமதிச் செலவு

சில பெரிய கடை­கள் இந்­தி­யா­வி­லி­ருந்து அதிக அள­வில் கரும்பை இறக்­கு­மதி செய்­துள்­ளன. திரு ராஜ்­கு­மார், தாமும் இந்­தி­யா­வி­லி­ருந்து கரும்பை கொண்­டு­வந்­துள்­ள­தா­கச் சொன்­னார்.

விநி­யோ­கப் பிரச்­சி­னை­யால் இறக்­கு­மதி செல­வும் கூடி­விட்­ட­தா­கக் கூறிய திரு ராஜ்­கு­மார், சென்ற ஆண்டு ஒரு கொள் கலன் கரும்­புக்கு $1,200 கொடுத்­த­தா­க­ வும் இந்த ஆண்டு அது $6,000 ஆகி­விட்­ ட­தா­க­வும் சொன்­னார். ஒரு கொள்கலனில் கிட்­டத்­தட்ட 4,000 கரும்­பு­கள் இருக்கும்.

அதே­போல் $12.00 ஆக இருந்த ஒரு கிலோ மல்­லி­கைப் பூ $40.00 ஆக உயர்ந்து விட்­டது என்­றார் அவர். மேலும் இந்­தி­யா­வி­லேயே தேவை அதி­கம் இருப்­ப­தால், குறைந்த அளவே ஏற்­று­மதி செய்­கி­றார்­கள் என்­ப­தை­யும் திரு ராஜ்­கு­மார் குறிப்­பிட்­டார். மலே­சி­யா­வி­லி­ருந்து கரும்­பும் பூவும் வந்­தி­ருந்­­தால் விலை ஏற்­றம் இருந்­தி­ருக்­காது என்­றார் அவர்.

இந்த ஆண்டு மலே­சி­யா­வி­லி­ருந்து குறைந்­த­ளவே கரும்பு வந்­துள்­ளது. பூவும் குறை­வாகவே வந்­துள்­ள­தா­க­வும் ஓம்­சி­வ­சக்தி பூக்­க­டை­யின் நிறு­வ­ன­ரான திரு.மு.வேலு­மணி குறிப்­பிட்­டார்.

பல கடை­களில் நேற்று மாலையில் பெரும்­பா­லும் கரும்பு விற்­று­விட்­டன.

பல கடை­க­ளி­லும் பூ விலை அதி­க­மாக இருந்­தது. அதிக விலை கொடுத்­தா­லும் தேவை­யான பூ கிடைத்ததில் பலருக்கும் மகிழ்ச்சி. நேற்று மாலை­யில் பெரும்­பா­லும் பூவும் தீர்ந்துவிட்டது.

கடந்த ஆண்டைவிட விற்பனை அதிகம்

கடந்த ஆண்­டை­விட இந்த ஆண்டு விற்­பனை அதி­க­மாக இருப்­ப­தாக லிட்­டில் இந்­தி­யா­வில் பல கடைக்­கா­ரர்­களும் கூறி­னர். இருப்­பி­னும், பொங்­கல் பொருள்­கள் வாங்க முன்­பு­போல இப்­போது எல்­லா­ருமே லிட்­டில் இந்­தி­யா­வுக்கு வரு­வ­தில்லை என்று வருத்­தப்­பட்­ட­னர் சில கடைக்­கா­ரர்­கள்.

"இப்­போது நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் இந்­தி­யக் கடை­கள் இருக்­கின்­றன. இஞ்சி, மஞ்­சள், கரும்பு, தேங்­காய் போன்ற பொங்­க­லுக்­குத் தேவை­யான பொருள்­கள் வீட்­டின் அரு­கி­லேயே கிடைப்­ப­தால், அதிகமானோர் இங்கு வருவதில்லை," என்­றார் கேம்­பல் லேனில் கரும்­புக் கடை வைத்­தி­ருந்த திரு சுரேந்­தர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­பாக இருக்க, பலர் லிட்­டில் இந்­தி­யா­வில் கூடு­வ­தைத் தவிர்க்க விரும்­பு­கின்­ற­னர். மேலும், பொங்­கல் வார­நா­ளில் வந்ததாலும் விற்­பனை சற்று குறைந்துள்ளதாக அவர் கூறி­னார்.

மற்ற நாள்­களில் அக்­கம்­பக்­கக் கடை­களில் வாங்­கி­னா­லும் பொங்­கல், தீபா­வளி போன்ற விழாக்­கா­லங்­களில் லிட்­டில் இந்­தியா செல்­வ­தையே பெரும்­பா­லா­ன­வர்­கள் விரும்­பு­கி­றார்­கள் என்­றார் ஹவ்­காங் பகு­தி­யில் கடை நடத்­தும் பெயர் குறிப்­பிட விரும்­பாத சில்­லறை வியா­பாரி.

பண்டிகை என்றால் தேக்காதான்

"தேக்கா போனால் பண்­டிகை வந்­த­து­ போல இருக்­கிறது. அங்கே பல கடை­கள் இருக்­கும். அதோடு இப்­படி ஏதா­வது பண்­டிகை, பெரு­நாள், நல்­ல­நாள் என்­றால்­தானே தேக்கா போக முடி­கிறது," என்றார் திருமதி லட்­சுமி, 64.

அம்­மா­வு­டன் லிட்­டில் இந்­தி­யா­வில் பொங்­க­லுக்­குத் தேவை­யான சாமான்­களைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொண்­டி­ருந்த முன்­னாள் தாதி­யான 55 வயது திரு­மதி கமலா ஸ்ரீநி­வா­சன், கொவிட் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பொங்­கல் கொண்­டாட்ட உணர்­வைக் கொன்­று­விட்­டது என்று வருத்­தப்­பட்­டார்.

"முன்புபோல பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. கொண்டாட்ட உணர்வே இல்லை. எப்படி இருந்தாலும் பொங்கல் வைக்க வேண்டும் என்பதால் பொருள்கள் வாங்க வந்தேன். அம்மாவுடன் வெளியில் செல்லும்போது பயத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது," என்றார் அவர்.

"கொவிட்டுக்காக கொண்டாட்டத்தை விட முடியுமா, விலை கூடிவிட்டதால் பொங்கல் வைக்காமல் இருக்க முடியுமா," என்றார் திருமதி லட்சுமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!