சிறுவர் வளர்ச்சியில் பெற்றோரின் முக்கியப் பங்கு

சிறுவர் வளர்ச்சியில் பெற்றோரின் முக்கியப் பங்கு

1 mins read
7445d83c-7719-48e4-a58e-5985c8889d2e
-

பிள்­ளை­க­ளின் கற்­றல் பய­ணத்­திலும் அவர்­க­ளி­டையே நற்­பண்­பு­களை விதைப்­ப­தி­லும் பெற்­றோர் முக்­கி­யப் பங்கு வகிப்­ப­தாகக் கல்விக்­கான இரண்­டாம் அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் கூறி­யுள்­ளார். மெய்­நி­கர் வாயி­லாக நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் கலந்­து­கொண்ட பிறகு டாக்­டர் மாலிக்கி அவ்­வாறு சொன்­னார்.

'அப்­லி­ஃப்ட்' செயற்­கு­ழு­வின் பங்­கா­ளி­க­ளு­டன் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் உத­வும் நோக்­கு­டன் பல அமைப்­பு­கள் இடம்­பெ­றும் இந்த செயற்­குழு 2018ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இந்த ஏற்­பாட்­டின்­கீழ் அர­சாங்க அமைப்­பு­கள், சமூக சேவை அமைப்­பு­கள் உள்­ளிட்ட 50க்கும் அதி­க­மான அமைப்­பு­க­ளைச் சேர்ந்த பங்­கா­ளி­கள் மாண­வர்­க­ளுக்­குக் உத­வி­யுள்­ள­னர். மாண­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­பட்­ட­து­டன் அவர்­க­ளுக்­குக் கைகொ­டுக்க தொண்­டூ­ழி­யர்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

"வீட்­டுச் சூழல், பிள்­ளை­க­ளுக்­குக் கற்­றுத்­த­ரும் நற்­கு­ணங்­கள், அவர்­க­ளி­டையே வளர்க்­கும் நற்­பண்­பு­கள் போன்­ற­வற்­றின் மூலம் ஒரு குழந்­தை­யின் வளர்ச்­சிக்­குப் பெற்­றோர் வகிக்­கும் பெரும் பங்கே பலர் அதி­க­மா­கக் குறிப்­பிட்ட முக்­கிய அம்­சம்," என்று டாக்­டர் மாலிக்கி சுட்­டி­னார்.

கடந்த நவம்பர் மாதம் அறி­வித்­த­தற்கு ஏற்­ற­வாறு வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்குவதற்கு 'அப்­லி­ஃப்ட்' பலன்களை மேம்­படுத்த அர­சாங்­கம் வகை­செய்­யும் என்­று டாக்­டர் மாலிக்கி சொன்னார்.