நாய்களுக்கு வலி, பயம், வேதனை கொடுக்கும் பயிற்சிக் கருவிகளும், பயிற்சி முறைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என பணிக்குழு ஒன்று பரிந்துரைத்திருக்கிறது.
அதோடு, நாய்களைத் தத்துகொடுப்பவர்கள் தங்கள் நாய்களை மதிப்பீடு செய்து அவற்றின் மருத்துவப் பின்னணியையும் அவை நடந்துகொள்ளும் முறையையும் தத்தெடுப்பவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அந்தக் பணிக்குழு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கும் வழிமுறைகளையும், அவற்றைத் தத்துக்கொடுக்கும் நடைமுறைகளையும் மேம்படுத்தும் நோக்கில் அந்தப் பணிக்குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. உரிமையாளர்களும் பயிற்றுவிப்பாளர்களும் நாய்களை இன்னும் நன்றாகக் கவனித்துக்கொள்ள வழிகாட்டிகள் உதவும் என தேசிய வளர்ச்சி துணைஅமைச்சர் திரு டான் கியட் ஹாவ் கூறினார். பொதுக் கலந்தாலோசனை வழி கருத்துகள் பெறப்பட்டதாகவும் கலந்துகொண்டோரில் 80 விழுக்காட்டினர் வழிகாட்டிகள் முக்கியமென கருத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விலங்கு வதை தடுப்புச் சங்கம் எனப்படும் எஸ்.பி.சி.எ அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர் பரிந்துரைகளை வரவேற்றார்.
"புதிய வழிகாட்டிகள் இருப்பதால் நாய்களைக் கொடுமைப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்", என்று அவர் சொன்னார்.

