நீடித்த நிலைத்தன்மை,அறிவார்ந்த அம்சங்களுடனான அலுவலகம்

நீடித்த நிலைத்தன்மை,அறிவார்ந்த அம்சங்களுடனான அலுவலகம்

2 mins read
c5b15c4c-a176-4695-a017-0857dcb8b3b9
79 ராபின்சன் சாலையில் அமைந்துள்ள நீடித்த நிலைத்தன்மை, அறிவார்ந்த அம்சங்களைக் கொண்ட புதிய அலுவலகக் கட்டடத்தின் திறப்பு விழாவில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடது) கலந்துகொண்டார். எரிசக்தி சேமிப்புக்குத் தேவையான பல அம்சங்களைப் புதிய கட்டடம் கொண்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கேப்­பிட்­டா­லேண்ட் நிறு­வ­னம் அதன் 29 மாடி அலு­வ­ல­கத்தை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்­து­வைத்­தது.

நீடித்த நிலைத்­தன்மை, அறி­வார்ந்த அம்­சங்­க­ளு­ட­னான இந்த அலு­வ­ல­கம் 79 ராபின்­சன் சாலை­யில் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தின் மையப் பகு­தி­யில் அமைந்­துள்­ளது.

பழைய மத்­திய சேம­நி­திக் கழ­கக் கட்­ட­டம் இருந்த இடத்­தில் கேப்­பிட்­டாலேண்ட் நிறு­வ­னத்­தின் இந்த உயர்­தர கட்­ட­டம் கட்­டப்­

பட்­டுள்­ளது.

உணர் கரு­வி­க­ளைப் பயன்

­ப­டுத்­தும் மின்­தூக்­கி­க­ளைப் புதிய அலு­வ­ல­கம் கொண்­டுள்­ளது.

எரி­சக்தி சேமிப்பை மன­தில் கொண்டு மின்­தூக்­கி­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய கட்­ட­டம் கேப்­பிட்­டாலேண்ட் நிறு­வ­னம், ஜப்­பா­னிய நிறு­வ­னங்­க­ளான மிட்­சுயி அண்ட் கோ நிறு­வ­னம் மற்­றும் தோக்­கியோ

டெ­மோனோ நிறு­வ­னம் ஆகி­ய­

வற்­றுக்­குச் சொந்­த­மா­கும்.

கட்­ட­டத்­தில் உள்ள அலு­வ­லக இடங்­களை வங்­கி­கள், சட்­டத்­துறை, விமா­னச் சேவை, தொலைத்­

தொ­டர்பு போன்ற பல்­வேறு துறை­

க­ளைச் சேர்ந்த 16 பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் வாடகைக்கு எடுத்­துள்­ளன.

கட்­ட­டத்­தின் 27வது மற்­றும் 28வது மா­டி­யில் சிறப்பு அலு­வ­லக இடங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அவற்­றுக்கு 'தி ஸ்கை வில்­லேஜ்' என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டங்­களை போஸ்­டன் ஆலோ­ச­னைக் குழு­மம் வாட­கைக்கு எடுத்­துள்­ளது.

கட்­ட­டத்­தின் குத்­த­கை­தா­ரர்­கள் பிரிட்ஜ் பிளஸ், கேப்­பிட்­டாலேண்ட் நிறு­வ­னத்­தின் நீக்­குப்­போக்­கான வேலை­யிட ஏற்­பா­டு­கள், சமூகத் தளம் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம்.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து இந்­தப் புதிய கட்­ட­டத்­தில் மேசை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் முறை, தனி அறை­கள்,

கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­கான அறை­கள், போன்­றவை வாட­கைக்கு விடப்­பட்டு வரு­கின்­றன.

மாதந்­தோ­றும் $550 செலுத்தி மேசை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­லாம். தங்­கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்­கக்­கூ­டிய தனி அறை­க­ளின் மாத வாட­கைத் தொகை $850 ஆகும்.

கட்­ட­டத்­தின் அதி­கா­ர­பூர்­வத் திறப்பு விழா­வின் சிறப்பு விருந்­தி ­ன­ராக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கலந்­து­கொண்­டார்.

புதிய அலு­வ­ல­கம் வழக்­க­மான அலு­வ­ல­கங்­க­ளை­யும் நீக்­குப்­

போக்கான வேலை­யி­டங்­க­ளை­யும் உள்­ள­டக்கி இருப்­பது குறித்து அமைச்­சர் லீ மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் முறை, அலு­வ­ல­கத்­தில் இல்­லாத வேறு இடங்­க­ளி­லி­ருந்து வேலை செய்­வது ஆகி­யவை குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சு ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப நிலங்­களை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பில் பரி­சீ­லனை செய்­யும் என்­றார் அவர்.

புதிய கட்­ட­டத்­துக்கு கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் பசுமை முத்­திரை பிளா­ட்டி­னம் விருது வழங்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் பசு­மைத் திட்டம் 2020ன் இலக்­கிற்கு ஏற்ப கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்க

உத­வும் வகை­யில் கட்­ட­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.