காலாங் பாரு எலும்புக்கூடு: அடையாளம் தெரியவில்லை

காலாங் பாரு எலும்புக்கூடு: அடையாளம் தெரியவில்லை

1 mins read
f8569b50-9ff6-4bf0-8e6f-b01e4d52bb1a
-

காலாங் பாரு­வில் உள்ள மேம்­

பா­லத்­துக்கு அடி­யில் கண்­டெக்­கப்­பட்ட எலும்­புக்­கூடு யாரு­டை­யது என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

அந்த எலும்­புக்­கூடு கண்­டு­பி­டிக்­கப்­பட்டு ஓராண்­டுக்கு மேல் ஆகிறது.

மர­ப­ணுச் சோத­னை­கள் நடத்­தப்­பட்டும் காணா­மல் போன 18 பேரு­டன் அதை ஒப்­பிட்­டுப் பார்த்­தும் எலும்­புக்­கூடு யாரு­டை­யது என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

மர­ணத்­துக்­கான கார­ணத்­தை­யும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை என்று மரண விசா­ரணை அதி­காரி இம்­மா­தம் 11ஆம் தேதி­யன்று தீர்ப்­ப­ளித்­தார்.

இறந்­த­வ­ரின் அடை­யா­ளம் தெரி­யா­வி­டி­னும் அவர் 30

வய­துக்­கும் 60 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆசிய ஆட­வர் என்று பிரே­தப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 9ஆம் தேதி­யன்று எலும்­புக்­கூடு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதற்கு ஆறு மாதங்­க­ளி

­லி­ருந்து ஓராண்­டுக்கு முன்பு

மர­ணம் நிகழ்ந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாலத்துக்கு அடியில் தளவாடப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மண்டை ஓட்டைப் பார்த்து நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்ததாகத் அறியப்படுகிறது.