நீதிமன்ற ஆவணங்களில் திருத்தம்: இனவாதக் கருத்துகளைப் பதிவிட்ட மாணவர் சீன நாட்டவர்

நீதிமன்ற ஆவணங்களில் திருத்தம்: இனவாதக் கருத்துகளைப் பதிவிட்ட மாணவர் சீன நாட்டவர்

2 mins read
4623102d-4a78-460e-b330-d7a3287be3d6
இனவாதக்கருத்துகளைப்பதிவிட்டதாககுற்றம்சாட்டப்பட்டுஉள்ள சுன்சிகொங். படம்:ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் -

இஸ்­லா­மிய சம­யத்­திற்கு எதி­ரான கருத்­து­க­ளை­யும் பெண்­கள் மீது வெறுப்பு தொனிக்­கும் கருத்­து­க­ளை­யும் 'இன்ஸ்­ட­கிராம்' சமூக ஊட­கத் தளத்­தில் பதி­விட்ட பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி மாண­வர், சீனா­வைச் சேர்ந்­த­வர் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­களில் திருத்­திக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுன் சிகொங் என்ற அந்த 21 வயது மாண­வர், சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி ஆவார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக, அவரை சிங்­கப்­பூ­ரர் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் அடை­யா­ளம் கண்­டிருந்­தன.

தெமா­செக் பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி மாண­வ­ரான சுன், நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார்.

அச்­சு­றுத்­தல், சமய ரீதி­யாக பிற­ரின் உணர்­வு­க­ளைக் காயப்­படுத்த வேண்­டும் என்ற நோக்­கில் இணை­யத்­தில் கருத்­து­க­ளைப் பதி­வி­டு­தல், ஆபா­சப் படங்­களை வைத்­தி­ருத்­தல் ஆகி­யவை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டு­களை சுன் எதிர்­நோக்கு­கி­றார்.

இஸ்­லா­மிய சம­யத்­திற்கு எதி­ரான கருத்­து­க­ளைக் கொண்ட பதி­வு­களை 2018ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் சுன் உரு­வாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான ஒரு­வர் தமக்கு நடந்­த­தைக் கூறி­ய­தைப் பற்­றி­யும் 2020ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி­யன்று இன்ஸ்­ட­கி­ராம் பதி­வு­கள் உரு­வாக்கி சுன் அச்­சு­றுத்­தல் அளித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதே ஆண்­டில் ஏப்­ரல், மே மாதங்­களில் இரண்டு ஆபா­சத் திரைப்­ப­டங்­களை சுன் பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­தா­க­வும் அவை அவ­ரின் கைபே­சி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இஸ்­லா­மிய சமூ­கத்­திற்கு எதி­ராக வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யில் கருத்­து­க­ளை­யும் மிரட்­டல்­க­ளை­யும் ஓர் இன்ஸ்­ட­கி­ராம் பய­னா­ளர் பதி­விட்­டுள்­ளது குறித்­துத் தங்­க­ளுக்­குப் பல புகார்­கள் வந்­த­தாக 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் காவல் அதி­கா­ரி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

பின்­னர், அதே ஆண்டு ஜூன் 8ஆம் தேதி­யன்று ஜூரோங் காவல் பிரிவு அதி­கா­ரி­கள் சுன்­னைக் கைது செய்­த­னர்.