தஞ்சோங் பகார் வட்டாரப் பூங்காவில் சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் அதன் புதிய வளாகத்தைத் திறந்துள்ளது. சுவர்கள் அதிகம் இல்லாமல் படைப்புகள் அதிகம் இடம்பெறும் ஒரு கருத்தாக்கத்தில் இப்புதிய வளாகம் அமைந்துள்ளதாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் குறிப்பிட்டார்.
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இடத்தின் வழி, புதியதொரு கலைகள், கலாசார குழுமம் உருவாகி இருப்பதாக நேற்றைய திறப்பு விழாவில் திரு டோங் கூறினார். வட்டாரப் பூங்காவில் குறைந்தது மூன்று புதிய கலை சார்ந்த வாடகைதாரர்கள் உள்ளனர்.

