ஐந்து அம்ச இணக்கத்தை மியன்மார் அமலாக்கவில்லை

'இப்போதைக்கு அரசியல் சாரா பிரமுகரையே ஆசியான் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும்'

ஆசி­யான் அமைப்­பில் இடம்­பெற்றுள்ள மியன்­மார், ஐந்து அம்ச இணக்­கம் ஒன்றை அம­லாக்க வேண்­டும் என்று அந்த 10 நாடு­கள் அமைப்பு 2021ல் தீர்­மா­னம் ஒன்றை நிறை­வேற்­றி­யது.

ஆனால் மியன்­மார் அந்த இணக்­கத்தை நடை­மு­றைப்­படுத்துவ­தில் குறிப்­பி­டத்தக்க முன்­னேற்றத்தைச் சாதிக்­க­வில்லை என்று ஆசி­யா­னின் தலை­மைப் பொறுப்பை இப்­போ­து ஏற்றிருக்கும் கம்­போ­டி­யா­வி­டம் பிர­தமர் லீ சியன் லூங் தெரி­வித்­து உள்ளார்.

கணி­ச­மான அள­வுக்கு முன்­னேற்­றம் ஏற்­ப­டும்­வரை அர­சி­யல் சாராத மியன்­மார் பிர­மு­க­ருக்கு மட்­டுமே ஆசி­யான் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட வேண்­டும் என்று திரு லீ, கம்­போ­டிய பிர­த­மர் ஹுன் சென்­னி­டம் கூறி­னார்.

திரு ஹுன் சென் வெள்­ளிக்­கி­ழமை காணொளி மூலம் பிர­த­மரை அழைத்­துப் பேசி­னார். ஆசி­யான் தலை­வர் என்ற முறை­யில் இந்த ஆண்­டில், தான் முன்­னு­ரிமை அளிக்க இருக்­கும் அம்­சங்­கள் பற்றி அவர் திரு லீயி­டம் எடுத்­துக் கூறி­னார்.

ஆசி­யா­னின் தலை­வ­ராக பொறுப்பு ஏற்­றுக்கொண்­டுள்ள கம்­போ­டி­யா­வுக்­கான தனது ஆத­ரவை பிர­த­மர் லீ அப்போது மறு­உ­று­திப்­படுத்­தி­னார் என்று சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

அண்­மை­யில் மியன்­மார் சென்று வந்­தது பற்றி திரு ஹுன் சென் தன்­னி­டம் விளக்­கி­ய­தற்­காக பிர­த­மர் லீ அவ­ருக்கு நன்றி தெரி­வித்­த­தாகவும் அமைச்சு கூறியது.

கம்­போ­டிய பிர­த­மர் ஜன­வரி 7, 8ஆம் தேதி­களில் மியன்­மார் சென்று அந்த நாட்­டின் மூத்த ஜெனரல் மின் ஆங் லைங்கை சந்­தித்­தார். மியன்­மா­ரில் ஓராண்டுக்கு முன் புரட்சி மூலம் ராணு­வம் ஆட்­சியை கைப்­பற்­றி­யது.

ஆசி­யான் தலை­வர்­களும் மியன்­மா­ரின் மூத்த ஜென­ரல் மின் ஆங் லைங்­கும் 2021 ஏப்­ரல் 24ஆம் தேதி ஜகார்த்­தா­வில் கூட்­டம் நடத்தி­னர்.

அப்­போது அந்த ஐந்து அம்ச இணக்­கம் ஏற்­றுக்கொள்­ளப்­பட்­டது.

மியன்­மா­ரில் வன்­செ­யல் முடிவுக்கு வர வேண்­டும். மியன்­மா­ருக்கு மனி­தா­பி­மான உதவி வழங்­கப்­பட வேண்­டும்.

ஆசி­யான் சிறப்­புத் தூதர் ஒருவர் உத­வி­யு­டன் எல்லா தரப்பு­களை­யும் உள்­ள­டக்­கிய பேச்­சு­வார்த்தை நடக்க வேண்டும் என்று அந்த இணக்­கம் அழைப்பு விடுத்­தது.

அந்த ஐந்து அம்ச இணக்­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் குறிப்­பிடத்­தக்க முன்­னேற்­றம் ஏற்­படும் வரை ஆசி­யான் கூட்­டங்­க­ளுக்கு மியன்­மா­ரில் இருந்து அர­சி­யல் சாராத பிர­மு­கரை மட்­டுமே அழைக்க வேண்­டும் என்று ஆசி­யா­னின் 38வது மற்­றும் 39வது உச்­ச­நிலை சந்­திப்­பு­களில் முடிவு எடுக்­கப்­பட்­டது.

மியன்­மா­ரில் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு முன்­னேற்­றம் ஏற்­படும் வரை இந்த முடிவை ஆசி­யான் பின்­பற்றி வர­வேண்­டும் என்று பிர­த­மர் லீ, கம்­போ­டிய பிர­த­ம­ரி­டம் தெரி­வித்­துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!