கொவிட்-19 கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியதைத் தொடர்ந்து டாக்சி, தனியார் வாடகை கார்களில் செல்வோரின் எண்ணிக்கை கூடி இருக்கிறது.
பொருளியல் மீண்டு வரும் நிலையில் விரைவில் இந்த எண்ணிக்கை கொவிட்-19க்கு முந்தைய நிலையை எட்டி விடும் வாய்ப்பு இருப்பதாக இத்தொழில் துறையினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், அத்தகைய வாகனங்களை ஓட்டக்கூடிய ஊழியர்கள் மேலும் பலர் தேவைப்படுவர் என்று கணிக்கப்படுகிறது.

