இல்லப் பணிப்பெண்கள் முதலாளி வீட்டில் வசிக்காமல் தனியாக வேறு ஓர் இடத்தில் வசித்தால் அத்தகைய பணிப்பெண்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பை யும் பார்த்துக்கொள்வது முதலாளிகளுக்கு மேலும் சிரமமானதாக இருக்கும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்து உள்ளது.
தனியாக வசிக்கையில் பணிப்பெண்கள் சட்டத்தை மீறினால் அல்லது காயம் அடைந்தால் அதற்கு முதலாளிகளே பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்று அமைச்சு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப் பிட்டது. சில வாசகர்களின் கருத்து தொடர்பில் அமைச்சு விளக்கம் அளித்தது.

