8,100 அதிர்ஷ்ட பைகள் அன்பளிப்பு

8,100 அதிர்ஷ்ட பைகள் அன்பளிப்பு

2 mins read
4cad3a12-8186-49b1-897c-a947059241d6
தெம்பனிசில் வசிக்கும் விஜயகுமாரி சுப்பையா, அமைச்சர் மசகோசிடம் இருந்து அன்பளிப்புப் பையைப் பெறுகிறார். படம்: சாவ் பாவ் -

சீனப் புத்­தாண்டு நெருங்­கும் வேளை­யில், சமூக உண்­டி­யல் அமைப்பு முதி­யோருக்­கும் உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்­கும் 8,100க்கும் மேற்­பட்ட விழாக்­கால அன்­ப­ளிப்­புப் பைகளை விநி­யோகிக்­கும்.

'அதிர்ஷ்­டப் பை' என்று குறிப்­பி­டப்­படும் அந்த அன்­ப­ளிப்­புப் பைகளில் உண­வுப்­பொ­ருள்­கள், குடும்­பத்­திற்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிப் பொருள்­கள் இருக்­கும்.

அந்­தப் பைகளில் பல்­வேறு பொருள்­க­ளை­யும் சேர்ப்­ப­தில் 1,150க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழியர்­கள் உத­வி­னார்­கள்.

சமூக உண்­டி­யல், 'ஹார்ட்­வார்­மர்ஸ்' என்ற தொண்­டூ­ழிய அமைப்­பு­டன் சேர்ந்து இந்த உத­வியை செய்து வரு­கிறது. சென்ற ஆண்டில் 6,700 அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­பட்­டன.

தேசிய சமூக சேவை மன்­றம் என்ற அமைப்பு சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் சமூக சேவை அமைப்­பு­களை ஒரு­மு­கப்­ப­டுத்­து­கிறது. இந்த மன்­றத்­தின் நிதி திரட்­டும் பிரி­வாக சமூக உண்­டி­யல் செயல்­ப­டு­கிறது.

மரினா பே சேண்ட்ஸ் கண்­காட்சி மற்­றும் மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்­சி­யில் அன்­ப­ளிப்­புப் பை விநி­யோ­கம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கி­யது. மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்­டார்.

தெம்­ப­னிஸ் தொகு­தி­யில் பல குடும்­பங்­க­ளுக்­கும் அன்­ப­ளிப்­புப் பைகளை குடும்ப, சமு­தாய மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி வழங்­கி­னார்.

இந்த ஆண்­டின் அன்­ப­ளிப்­புப் பை திட்­டத்­தின்­கீழ் சமூக உண்­டி­யல் $2.8 மில்­லி­ய­னுக்­கும் அதி­கத் தொகையை திரட்டி இருக்­கிறது.

இந்த உண்­டி­யல் 100க்கும் மேற்­பட்ட சமூ­கச் சேவை அமைப்­பு­களை­யும் 200க்கும் மேற்­பட்ட செயல்­திட்டங்­க­ளை­யும் நடை­மு­றைப்­படுத்தி வரு­கிறது.

அவற்­றின் மூலம் 41,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பயன் அடை­கிறார்­கள். இதற்காக ஆண்­டு­தோ­றும் அந்த உண்­டி­ய­லுக்கு $50 மில்­லி­ய­னுக்­கும் அதி­கத் தொகை தேவைப்­படு­கிறது.