அமைச்சர் ஓங்: நான்கு பெரும் கேள்விகள்

அமைச்சர் ஓங்: நான்கு பெரும் கேள்விகள்

1 mins read
7ab44fd3-71a3-4d2a-83b4-c2af67f8edc2
-

அடுத்த தொற்­று­நோ­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் ஆயத்­த­மா­கும் வேளை­யில், நான்கு முக்­கிய கேள்வி­களை மன­தில் கொள்ள வேண்­டும் என்று வெள்­ளிக்­கி­ழமை சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

நோய் எந்த வேகத்­தில் பர­வும் என்­பது அவற்­றில் ஒரு கேள்வி. நோயால் பாதிக்­கப்­ப­டா­மல் மக்­களை எப்­படி பாது­காக்க முடி­யும் என்­பது ஒரு பிரச்­சி­னை­யாக இருக்­கும். இது தடுப்­பூ­சி­யு­டன் தொடர்­பு­டைய ஒன்­றாக இருக்­கும். மிக­வும் நோய்­வாய்ப்­பட்­ட­வர்­களைச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை எப்­படி சமா­ளிக்க முடி­யும் என்ற கேள்­வி­யும் எழும்.

தொற்று கார­ண­மாக மருத்­து­வம் சாராத உள்­கட்­ட­மைப்பு வச­தி­ களில் தாக்­கங்­கள் எந்த அள­வுக்கு இருக்­கும் என்­பதை நாடு­கள் பரி­சீ­லிக்க வேண்டி இருக்­கும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

நகர சூழ­லில் சுகா­தார அவ­ச­ர­கால ஆயத்த நிலை­யைப் பலப்­படுத்­து­வது தொடர்­பில் உலக சுகா­தார நிறு­வ­னம் கூட்­டாக ஏற்­பாடு செய்த தக­வல் கருத்­த­ரங்­கம் ஒன்­றில் அமைச்­சர் பேசி­னார்.

தொற்­று­நோய் ஏற்­ப­டும்­போது அதைச் சமா­ளிக்­கத் தேவை­யான நடை­மு­றையை 2003ல் சார்ஸ் நெருக்­கடி ஏற்­பட்­டபோது சிங்­கப்பூர் உரு­வாக்­கி­யது.

ஆனால் கொவிட்-19 தலை­காட்­டி­ய­போது அந்த நடை­முறை போதாது என்­பதை சிங்­கப்­பூர் கண்டுகொண்­டது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.