உலக சாதனைக் குறும்படம்

உலக சாதனைக் குறும்படம்

2 mins read
9fe0f233-9b34-49d2-9aa4-e9884ecbc8b6
'அறி' விளம்பரத் தட்டியை திரு குண­சீ­லன்(வலது) வெளியிட திரு மில்லத்அகமது பெற்றுக்கொண்டார். படம்: மில்லத் அகமது -

தற்­கொலை பற்­றிய விழிப்­பு­ணர்வு மற்­றும் முயன்­றால் முடி­யா­தது ஒன்று­மில்லை என்ற கருத்தை மைய­மாக வைத்­துத் தயா­ரித்த 'அறி' என்ற குறும்­ப­டத்­தின் விளம்­பரத் தட்­டியை, சிங்­கப்­பூர் இந்­தி­யக் கலை­ஞர் சங்­கத்­தின் தலை­வர் திரு குண­சீ­லன் இம்­மா­தம் ஒன்­ப­தாம் தேதி­யன்று வெளி­யிட, அந்­தக் குறும்­ப­டத்­தின் இயக்­கு­நர் மில்­லத் அக­மது பெற்­றுக்­கொண்­டார். மாட்­டுப் பொங்­க­லான நேற்று இந்­தக் குறும்­ப­டத்தை அதி­கா­ர­பூர்­வ­மாக மில்­லத் வீடியோ சர்­வீஸ் என்ற யூடி­யூப் ஒளி­ய­லை­யில் திரு குண­சீ­லன் வெளி­யிட்­டார்.

"ஏழு நிமி­டத்­தில் தனி ஒரு கதா­பாத்­தி­ர­மாக, வச­னம் பேசா­மல், தன் முகப் பாவ­னை­கள் மூலம் மிக சிறப்­பாக நடித்து ஒரு நல்ல கருத்தை மக்­க­ளுக்­குச் சொல்­லி­யி­ருக்­கி­றார். இக்­கு­றும்­ப­டம் சில விரு­து­களைப் பெற்றதோடு உலக சாத­னை­யும் செய்­துள்­ளது. சிங்­கப்­பூர் இந்­தி­யக் கலை­ஞர் சங்­கத்­தின் மூலம் எங்­கள் வாழ்த்­து­க­ளைக் கூறி மகிழ்­கி­றோம்," என்­றார் திரு குண­சீ­லன். குறும்­ப­டத்­திற்கு வச­னம் பேசிய கவி­ஞர் பானு சுரேஷ், மோன­லிசா, அ­ஃபீஃபா, சியா லிம், இசை­ய­மைத்த பால் மற்­றும் ஒளிப்­ப­திவு செய்த அலிஃப் அஹ்­மது ஆகி­யோ­ருக்கு இயக்­கு­நர் நன்றி தெரி­வித்­தார்.

'அறி' என்ற தன்­மு­னைப்­புக் குறும்­ப­டத்­தில் ஒரே ஒரு கதா­பாத்­தி­ரத்தை ஏற்று நடித்­த­தோடு மட்­டு­மின்றி ஒப்­பனை, உடை­கள், கலை, உதவி ஒளிப்­ப­திவு, பிண்­ண­னிக் குரல், படத்­தொகுப்பு, வசன வரி­கள், தயா­ரிப்பு, வரை­கலை, ஒலிக்­க­லவை, கதை, திரைக்­கதை, வச­னம், பாடல், தயா­ரிப்பு, இயக்­கம் என 16 பொறுப்­பு­களை மில்­லத் அக­மது ஏற்ற குறும்­ப­டம் என்று கலாம் உல­கச் சாதனை புத்­த­கம் கடந்த அக்­டோ­பர் மாதம் 25ஆம் தேதி­யன்று பதி­வு­செய்து அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது.