கொவிட்-19 தொற்று காரணமாக பொருள்களின் வரத்து தாமதமாகலாம்

கொவிட்-19 தொற்று காரணமாக பொருள்களின் வரத்து தாமதமாகலாம்

1 mins read
2c978139-2e55-4228-9bf3-3ad36d6cb545
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகில் விநியோகச் சங்கிலி கட்டமைப்பு ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்து வருகிறது. அந்தக் கட்டமைப்பு இந்த ஆண்டில் மீண்டுவிடும் என்று நம்பப்பட்டு வந்தது.

இவ்வேளையில், உலகம் முழுவதும் புதிதாக கொரோனா தொற்று தலையெடுத்திருப்பதால் அந்த நம்பிக்கை மங்கிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பிப்ரவரி 1ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படும் நேரத்தில், பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் பணவீக்கம் உயரும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

''கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தின்போது தொற்று காரணமாக உலகளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டதைப் பார்த்தோம். அதேபோல, எதிர்வரும் சீனப் புத்தாண்டு காலத்தில் தருவிப்பு ஆணைகள் அதிகமானால் அது வியப்பாக இராது,'' என்று டிஎம்எக்ஸ் ஆசியா நிறுவனத்தில் பொருள் சேவை விநியோகக் கட்டமைப்பு வல்லுநரான ஜேம்ஸ் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.