பழைய புத்தகத்தைக் கொடுத்து பணம் பெற புதிய திட்டம்

பழைய புத்தகத்தைக் கொடுத்து பணம் பெற புதிய திட்டம்

2 mins read
5b7492b9-21ba-44a9-b434-c4f050e81267
-

சிங்­கப்­பூ­ரின் தென்­மேற்­குப் பகு­தி­ யில் செயல்­படும் நூல் வாசிப்பு முகப்­பு­களுக்கும் 14 சமூக நூல கங்­களுக்­கும் பழைய புத்­த­கங்­களை அன்­ப­ளிப்­பா­கக் கொடுத்து சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு புத்­த­கத்­திற்கு 5 காசு பெற­லாம்.

'தென்மேற்­கில் உங்­கள் புத்­த­கங்­க­ளைப் பகிர்ந்துகொள்­ளுங்­கள்' என்ற ஒரு திட்­டம் தொடங்­கப்­பட்டு உள்­ளது.

தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் அறி­மு­கப்­ப­டுத்தி இருக்­கும் அந்­தத் திட்­டம், சமூக நூல் வாசிப்பு நிலை­யங்­க­ளுக்­குப் புத்­த­கங்­களை மக்­கள் வழங்க ஊக்­க­மூட்­டு­கிறது.

அத்­திட்­டத்­தின்­படி, சிங்­கப்­பூரர்­கள் பழைய புத்­த­கங்­களைக் கொடுத்து மறு­சு­ழற்சிப் புள்ளி களைச் ­செ­ய­லி­யில் பெற­லாம். அவற்­றைப் பண­மாக்­க­லாம்.

தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் பல்­வேறு சுற்­றுச்­சூ­ழல் செயல் திட்­ட­ங்களை நடை­முறைப்­ப­டுத்தி வரு­கிறது.

அவற்­றில் ஆகப் புதிய திட்­ட­மாக இது இடம் பெறு­கிறது. தென் மேற்குச் சுற்­றுச்­சூ­ழல் பெருந்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அறவே விர­யம் அற்ற நிலை­யைச் சாதிக்க வேண்­டும் என்ற முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

'தென்­மேற்­கைத் தூய்மைப்­படுத்துவோம்' என்ற ஒரு நிகழ்ச்சி நேற்று ஹில்­வியூ சமூக மன்­றத்­தில் நடந்­தது. வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் அதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்­டார்.

அப்­போது அமைச்­சர், 'தென் மேற்­கில் உங்­கள் புத்­த­கங்­க­ளைப் பகிர்ந்துகொள்­ளுங்­கள்' திட்­டத்தைத் தொடங்­கி ­வைத்­தார்.

நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த செயல்­க­ளைச் சமூ­கத்­தில் ஏற்­படுத்த நிறு­வ­னங்­களும் அர­சாங்க அமைப்­பு­களும் சேர்ந்து செயல்­படு­வ­தைக் காண்­பது மகிழ்ச்சி தரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

தேசிய நிலை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய முயற்சிகளுக்கு ஒவ்­வொரு ­வ­ரும் உறு­துணை­யா­கத் திகழ முடி­யும் என்று அவர் கூறி­னார்.

இத­னி­டையே, தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் நடை­மு­றைப்­ப­டுத்­தும் சுற்­று­ச்சூ­ழல் பெருந்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, அந்த மாவட்­டம் இப்­போது 53 மறு­சு­ழற்­சிப் புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது. சென்ற ஆண்டு முடி­வில் அது 979 டன் மறு­சு­ழற்­சிப் பொருட்­க­ளைச் சேக­ரித்­தது.

இது 16,500க்கு­ம் மேற்­பட்ட மரங்­க­ளைக் காப்­பாற்­றி­ய­தற்­குச் சம­மா­னது என்று தென்­மேற்கு மாவட்ட மேயர் திரு­வாட்டி லோ யென் லிங் கூறி­னார்.

''தென்மேற்கு மாவட்­டத்­தைப் பொறுத்தவரை சுற்­றுச்­சூ­ழ­லைப் பேணு­வ­தில் கடந்த பல ஆண்டு­களா­கவே முத்­திரை பதிக்­கப்­பட்­டுள்­ளது. இதைப் பொறுத்­த­வரை மேலும் பல­வற்­றைச் சாதிக்க நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்,'' என்­றார் திரு­வாட்டி லோ.

தென்­மேற்கு மாவட்­டத்­தில் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் பழைய மின்­னி­யல் பொருள்க­ளைச் சேக­ரிப்­ப­தற்­கான கூடங்­கள் அமைக்­கப்­பட்­டன. அது முதல் 11.6 டன் பழைய கழி­வுப் பொருள்­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.