முன்னதாகவே பணம் செலுத்தி வாங்கப்படும் (ப்ரீபெய்டு) சிம் கார்டுகளை மோசடியான முறையில் பதிவு செய்ததன் தொடர்பில் நேற்று நடந்த ஊழல் தடுப்பு நடவடிக்கையின் போது ஒன்பது ஆடவர்கள், ஒரு பெண் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் நேற்று ஆர்ச்சர்ட், கேலாங், சிராங்கூன், பாசிர் ரிஸ், ஜூரோங் வெஸ்ட், ஈசூன், உட்லண்ட்ஸ், பூன் லே, டெஸ்கர் ரோடு, சையத் அல்வி ரோபு, ரோச்சோர் கேனல் ரோடு ஆகிய இடங்களில் செயல்படும் 17 கைபேசி கடைகளில் ஒன்பது மணி நேரம் சோதனை நடத்தினார்கள்.
10 சந்தேகநபர்களும் 31 முதல் 56 வயது வரையுள்ளவர்கள். மேலும் 24 முதல் 68 வயது வரையுள்ள 15 ஆண்களும் ஒன்பது பெண்களும் விசாரணை யில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
அப்பாவிகளான வாடிக்கை யாளர்கள் அல்லது வெளி நாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் மோசடி யான முறையில் சிம் கார்டு களை பதிந்து இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

