சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக ஏறக்குறைய எல்லா உறைவிடங்களும் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்து உள்ளது.
2020 மார்ச் நிலவரப்படி ஏறக் குறைய 200 பேர் அத்தகைய நிலையங்களில் தங்கி இருந்தனர்.
ஆனால் 2020 ஏப்ரலுக்கும் 2021 நவம்பர் மாதத்துக்கும் இடையில் அந்த எண்ணிக்கை ஐந்து மடங்காகி சுமார் 1,000 ஆகக் கூடிவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தைக் குறைத்துக்கொள்ளும் வகையில் பொது இடங்களில் மேலும் பல மூடப்பட்டன. வாடகை வீட்டிற்கான காத்திருக்கும் காலம், வாடகைக் கட்டணம் கூடுகிறது.
இந்த நிலையில், வீதிகளின் ஓரமாக படுத்துத் தூங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சமூகத் தொண்டூழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

