தொழிற்கல்வி மாணவர்களுக்குக் கட்டணம் கூடுகிறது

தொழிற்கல்வி மாணவர்களுக்குக் கட்டணம் கூடுகிறது

1 mins read
e5fab836-fc5a-474e-b457-c82385c47c9b
-

பல­துறை தொழிற்­கல்­லூரி தொழில்­நுட்­பப் கல்­விக்கழ­கத்­தில் இந்த ஆண்டு பட்டப் படிப்­பிற்குச் சேரும் சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளுக்­கான பாடக் கட்­ட­ணம் $100 கூடு­கிறது.

அவர்­கள் ஐந்­தாண்டு தொழில்­நுட்­பப் படிப்­பிற்­குச் சேரும்­போது வரு­டாந்­திர கட்­ட­ண­மாக $3,000 செலுத்த வேண்­டும். இதற்கு முன்­பாக 2019ஆம் ஆண்­டி­லும் இந்­தக் கட்­ட­ணத்­தில் $100 கூடி­யது.

என்­றா­லும் இரண்­டாண்டு உயர்­நிலை சான்­றி­தழ் பயிற்சிப் படிப்­பில் சேரும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான கட்­ட­ணம் மாற்­ற­மின்றி இருக்­கும்.

புதிய கட்­ட­ணம் இந்­தக் கல்வி ஆண்­டில் சேரும் மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே பொருந்தும். ஏற்­கெ­னவே படிக்­கும் மாண­வர்­க­ளுக்­கு கட்டண மாற்றம் இராது.

நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கான பாட கட்­ட­ணம் $200 கூடி $6,200 ஆக இருக்­கும்.

அனைத்­து­லக மாண­வர்­க­ளுக்­கான கட்­ட­ணம் $400 அதி­க­ரித்து $11,400 ஆகக் கூடும்.

நைட்டெக் பட்­ட­யப் படிப்­பில் புதி­தா­கச் சேரும் சிங்­கப்­பூ­ரர்கள் $20 அதி­க­மாக $430 செலுத்த வேண்டி இருக்கும்.

நிரந்­த­ர­வா­சி­க­ளுக்கு இந்­தக் கட்­ட­ணம் $300 உயர்த்­தப்­பட்டு $5,850 ஆக இருக்­கும். அனைத்­து­லக மாண­வர்­க­ளுக்குக் கட்­ட­ணம் $900 கூடி $16,350 ஆக உயர்த்­தப்­படும்.

கட்­டண உயர்வு பற்­றி விளக்­கிய கல்வி அமைச்­சின் பேச்­சா­ளர், அர­சாங்­கம் பல­துறை தொழிற்­கல்­லூரி, தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக படிப்­புக்குக் கணி­ச­மாக மானி­யம் வழங்­கு­வ­தா­கக் கூறி­னார்.

தர­மான கல்­வியைக் கொடுக்க இந்­தத் தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­கள் முயன்று வரு­கின்­றன. இத­னால் அவற்­றுக்­குச் செலவு கூடு­கிறது என்று அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.