செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2c515145-8b6a-4b8e-ac1e-915888cfab3e
-

தொற்று காரணமாக பொருள்கள் வரத்து தாமதமாகலாம்

உல­கில் பொருள் சேவை விநி­யோ­கக் கட்­ட­மை­ப்பு ஏற்­கெனவே பாதிக்­கப்­பட்ட நிலை­யில் இருந்­து­ வ­ரு­கிறது. அந்தக் கட்­ட­மைப்பு இந்த ஆண்டில் மீண்டு விடும் என்று நம்­பப்­ப­டு­கிறது. இவ்­வே­ளை­யில், உல­கம் முழு­வ­தும் புதி­தாக கொரோனா தொற்று தலையெடுப்­ப­தால் அந்த நம்­பிக்கை மங்கிவிடக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தாகக் கூறப்படுகிறது.

இது ஒரு­பு­றம் இருக்க, பிப்­ர­வரி 1ஆம் தேதி சீனப் பெரு­நாள் கொண்­டா­டப்­படும் நேரத்­தில் பொருள்க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­படும் வாய்ப்­பும் பண­வீக்­கம் உய­ரும் வாய்ப்­பும் இருப்­ப­தா­க­வும் தெரிவிக்கப்படுகிறது.

''கிறிஸ்­மஸ் கொண்­டாட்ட காலத்­தின்­போது தொற்று கார­ண­மாக உலக பொருள் சேவை விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்­ட­தைப் பார்­த்தோம். அதே­போல் வரும் சீனப்­புத்­தாண்டு காலத்­தில் தரு­விப்பு ஆணை­கள் அதி­க­மா­னால் அது வியப்­பாக இராது,'' என்று டிஎம்­எக்ஸ் ஆசியா நிறுவனத்­தில் பொருள் சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு வல்­லு­ந­ரான ஜேம்ஸ் கிறிஸ்­டோ­பர் தெரி­வித்­தார்.

ஓமிக்ரான் கிருமித்தொற்று சனிக்கிழமை குறைந்தது

சிங்­கப்­பூ­ரில் சனிக்­கி­ழமை புதி­தாக 692 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது. இந்த எண்­ணிக்கை அதற்கு முந்­தைய நாளன்று 832 ஆக இருந்­தது. அவர்­களில் 541 பேர் உள்­ளூ­ரைச் சேர்ந்­த­வர்­கள். 151 பேர் வெளி­நா­டு­களிலிருந்து வந்­த­வர்­கள்.

மொத்­தம் 956 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது. அவர்­களில் 552 பேர் உள்­ளூர் மக்­கள். 404 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

இந்த எண்­ணிக்கை வெள்­ளிக்­கி­ழமை 945 ஆக இருந்­தது. புதி­தாக மூவர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். மொத்த மரண எண்­ணிக்கை 843 ஆகி­யது. வாராந்­திர கிருமித் தொற்று அதி­க­ரிப்பு விகிதம் சனிக்­கி­ழமை 1.47 ஆகக் கூடி­யது. சிங்­கப்­பூ­ரில் கொரோனா தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை சனிக்கி­ழமை நில­வ­ரப்படி 290,986. மருத்­துவமனை­யில் 181 பேர் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் 12 பேர் உள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகுதி பெற்றுள்ள­வர்­களில் மொத்­தம் 91 விழுக்­காட்­டினர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர். ஏறத்­தாழ 51 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

சீர்திருத்த கட்சித் தலைவர் சார்ல்ஸ் இயோ கைது

சீர்­தி­ருத்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான சார்ல்ஸ் இயோ, நம்­பிக்கை மோசடி, தில்­லு­முல்லு ஆகி­ய­வ­ற்றில் ஈடு­பட்டு இருப்­ப­தாகக் கூறப்­படுவதை அடுத்து அவர் புதன்­கி­ழமை கைதா­ன­தாக காவல்­துறை சனிக்­கி­ழமை தெரி­வித்­தது.

தனக்கு எதி­ரான புலன்­வி­சா­ர­ணை­கள் அர­சி­யல் நோக்கம் கொண்­டவை என்று திரு இயோ கூறி­யதை காவல் துறை திட்­ட­வட்டமாக நிரா­க­ரித்­து­விட்­டது.

திரு இயோ, குற்­ற­வி­யல் தற்­காப்பு வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்­றும் 'வொயிட்­ஃபீல்ட் லா கார்ப்­ப­ரே­ஷன்' என்ற நிறு­வனத்­திற்கு எதி­ராக புலன்­வி­சா­ரணை நடந்­து­ வ­ரு­வ­தாக காவல்­துறை உறு­தி­படத் தெரி­வித்­தது. அந்த நிறு­வ­னத்­திற்கு எதி­ராக காவல் துறை­யில் புகார் செய்­யப்­பட்­டதை அடுத்து புதன்­கி­ழமை வேறு ஓர் ஆட­வ­ரும் கைதான தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

வொயிட்­ஃபீல்ட் லா கார்ப்­ப­ரே­ஷன் நிறுவனத்­தின் வெவ்­வே­றான நான்கு வாடிக்கையாளர்­கள் தொடர்­பில் நான்கு புகார்­கள் தாக்­க­லா­ன­தாக தெரி­வித்த காவல்­துறை, அந்­தப் புகார்­கள், தில்­லு­முல்லு மற்­றும் அல்­லது நம்­பிக்கை மோசடி சம்­பந்­தப்­பட்­டவை என்­றும் கூறி­யது.

திரு இயோ, 2020 பொதுத் தேர்­த­லில் ஆங் மோ கியோ குழுத்­தொ­கு­தி­யில் போட்டியிட்ட சீர்­தி­ருத்­தக் கட்சி வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக இருந்­தார். பிர­த­மர் தலைமையிலான மக்­கள் செயல் கட்சி அணியை எதிர்த்து அது தோற்றது.