‘இன்று நாங்­கள் சாத­னை­யா­ளர்­கள்’ லட்சியப் பயணங்கள் முடிவதில்லை

நமது லட்சியத்தை அடையும் பயணத்தில் தடைகள் நூறு வந்தாலும் நம்மிடம் உள்ள மனவலிமையும் நம்பிக்கையும் நம்மைத் தொடர்ந்து நடைபோட வைக்கும். இன்றைய இளையர் முரசில் இடம்பெற்று இருக்கும் இளையர்கள் இவ்வாறு தடைகள் பல கடந்து லட்சியப் பாதையில் பயணம் செய்பவர்கள். நமது லட்சியத்தைச் சற்று நமக்கே நினைவூட்டும் கதைகள் இவை.

தன்­னைப் பற்றி தானே அறிந்­தி­ருந்­த­தால் சுய புரி­த­லின் மூலம் தனக்­குத் தரப்­படும் பணி­க­ளைச் செவ்­வனே செய்ய முடிந்­த­தாக சுவிஸ் காட்­டேஜ் உயர்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்த ருஷில் ஸ்ரீநாத் தெரி­வித்­தார்.

பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் சாதா­ரண நிலைத் தேர்­வில் அனைத்­துப் பாடங்­க­ளி­லுமே உச்­சத் தேர்ச்­சி­யான 'ஏ1' பெற்ற ருஷில், இந்­தத் தேர்ச்­சியை எதிர்­பார்க்­க­வில்லை என்று புன்­ன­கை­யு­டன் தமிழ் முரசி­டம் தெரி­வித்­தார்.

கிரு­மிப் பர­வல் தொடங்­கிய கால­கட்­டத்­தில் இல்­லம் சார்ந்த கற்­ற­லைப் பள்­ளி­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தின. அத­னால் ஏற்­பட்ட பல மாற்­றங்­க­ளால் தான் அசௌ­கர்­யத்தை உணர்ந்­த­தா­கக் கூறி­னார் ருஷில்.

"மாற்­றத்­திற்கு ஏற்ப நாம் அனை­வ­ரும் மாறிக்­கொண்­டோம். கற்­றல் செய­லி­கள் மூலம் மாண­வர்­க­ளின் சிக்­கல்­க­ளுக்கு ஆசி­ரி­யர்­கள் தீர்வு கண்­ட­னர்," என்று அவர் கூறி­னார்.

உயி­ரி­யல், ரசா­ய­னப் பாடங்­களை விரும்­பிப் படிப்­ப­தா­கக் கூறும் ருஷில், கிரு­மிப் பர­வ­லைப் பற்றி தான் படித்த தக­வல்­கள் அந்த ஆர்­வத்தை அதி­கப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி­னார்.

"தடுப்­பூ­சி­யின் ஆற்­றலை பள்­ளிப்­பா­டங்­க­ளின் மூலம் அறிந்­து­கொள்­வ­தால் கற்­றல் மேலும் சுவா­ர­சி­ய­மா­கிறது," என்­றார் அவர்.

தமிழ்ப் பாடத்­திற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டி இருந்­த­தா­கக் கூறிய ஸ்ரீநாத், தமிழ் ஆசி­ரி­யர் திரு அப்­துல் நசீர், தமிழ் துணைப்­பாட ஆசி­ரி­யர் குமாரி காயத்­திரி ஆகி­யோ­ரி­டம் அடிக்­கடி தனது சந்­தே­கங்­க­ளைக் கேட்­டுத் தெளிந்­த­தா­கக் கூறி­னார்.

"தொடக்­கப்­பள்­ளி­யில் தமிழ் மொழிக்­கான எனது அடித்­த­ளம் வலு­வாக இல்­லா­த­தால் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் கூடு­தல் முயற்சி எடுக்க வேண்டி இருந்­தது. என் ஆசி­ரி­யர்­கள் இத­னைப் புரிந்­து­கொண்டு சிறந்த முறை­யில் எனக்கு வழி­காட்­டி­னர்," என்று அவர் கூறி­னார்.

பள்­ளிப் பாட்­டுக் குழு­வின் செயற்­குழு உறுப்­பி­ன­ரான ருஷில், மாண­வர்­க­ளுக்கு வழி­காட்­டும் பொறுப்­பை­யும் ஏற்­றி­ருந்­தார். மேலும், பல்­வேறு இணைப்­பாட நட­வ­டிக்­கை­களில் இருந்த அவர், நேர நிர்­வா­கத்­தில் வல்­ல­வ­ரா­க­வும் இருக்­கி­றார்.

"கால அட்­ட­வணை முறை­யைப் பயன்­ப­டுத்­து­வேன். அதே நேரத்­தில் எப்­போது ஓய்வு தேவை என்­பதை உணர்ந்து அதற்கு ஏற்ப வேலை­களை முடித்­திட அறிந்­து­கொண்­டேன்.

"நமது உட­லின் ஆற்­ற­லுக்கு மீறி உழைக்­கும்­போது சோர்வு தட்­டும். இது சில முக்­கி­ய­மான தரு­ணங்­களில் நமக்­குப் பாத­க­மாக அமை­ய­லாம். ஆழ­மா­கப் பாடங்­க­ளைப் படிப்­பது எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அவ்­வ­ள­வுக்கு தேர்வு நேரத்­தில் விழிப்பு நிலை­யை­யும் நிதா­னத்­தை­யும் காப்­ப­தும் அவ­சி­யம்," என்று அவர் கூறு­கி­றார்.

தன்­னு­டன் நண்­பர்­கள் போன்று பழகி அன்­பு­டன் பார்த்­துக்­கொண்டு மகிழ்ச்­சிப்­ப­டுத்­திய தன்­னு­டைய பெற்­றோ­ரின் மூலம் அமைதி அடை­வ­தா­கக் கூறும் ருஷில், அவர்­க­ளுக்கு நன்றி கூற விரும்பு வதா­க­வும் தெரி­வித்­தார். தொடக்­கக் கல்­லூ­ரிக்­குச் செல்ல விரும்­பும் ருஷில், வருங்­கா­லத்­தில் மருத்­து­வர் அல்­லது ஆசி­ரி­ய­ராக இருக்க ஆசைப்­ப­டு­கி­றார்.

உயர்­நிலை ஒன்­றில் வழக்­க­நிலை ஏட்­டுக்­கல்­விப் பாதை­யில் இணைந்த பாஸ்­கர் ஸ்ருதி, விரைவு நிலைக்கு மாற­வேண்­டும் என்ற மன­உ­று­தி­யு­டன் செயல்­பட்­டார்.

சாதா­ரண நிலைத் தேர்­வில் 15 புள்­ளி­க­ளைப் பெற்­றுள்ள இவர், தனது அடுத்த இலக்­காக தொடக்­கக் கல்­லூ­ரிக்­குச் செல்­வ­தைக் குறி­வைத்­துள்­ளார்.

தனது முதல் வெற்­றிக்­கான கார­ணம், தள­ராத நம்­பிக்­கையே என்­றார் ஸ்ருதி. சுவிஸ் காட்­டேஜ் உயர்­நி­லைப்­பள்­ளி­யின் விரைவு நிலை­யில் பயில, ஸ்ரு­தி­யின் தொடக்­கப்­பள்ளி ஆண்­டி­று­தித் தேர்வு முடி­வு­கள் தகு­தி­பெ­ற­வில்லை.

"சுவிஸ் காட்­டெஜ் பள்­ளி­யின் விரைவு நிலை­யில் சேர்­வதே எனது முதல் கன­வாக இருந்­தது. அது தோல்வி அடைந்­த­போ­தும் நான் என் கன­வைக் கைவி­ட­வில்லை," என்று அவர் கூறி­னார்.

இலக்கை உறு­தி­செய்­ததை அடுத்து அதற்­குத் தேவைப்­படும் வளங்­க­ளைத் திரட்­டு­வது ஸ்ரு­தி­யின் அடுத்­த­கட்ட பணி­யாக இருந்­தது. தமது ஆசை­யைப் பெற்­றோ­ரி­ட­மும் ஆசி­ரி­யர்­க­ளி­ட­மும் கூறிய ஸ்ருதி, தனக்­கா­கவே ஓர் ஆத­ர­வுக் குழுவை அமைத்­து­கொள்ள முடிவு செய்­தார்.

"பாடங்­களில் எழும் சந்­தே­கங்­களை உட­னுக்­கு­டன் தெளி­வு­ப­டுத்த முற்­ப­டு­வேன்," என்று அவர் கூறி­னார். தம் பெற்­றோர் பாடங்­க­ளுக்கு மட்­டும் உத­வி­ய­து­டன் தனக்கு மன­த­ள­வில் பெரும் ஆத­ர­வை­யும் நல்­கி­னர். தனக்கு நல்ல நண்­பர்­களும் அமைந்­த­தால் அனை­வ­ருமே சேர்ந்து படித்­த­தாக ஸ்‌ருதி கூறி­னார்.

முன்­னேற்­றம் தேவைப்­படும் பாடங்­களில் ஸ்ருதி அடிக்­கடி பயிற்சி செய்து வந்­தார். தொடக்­கத்­தில் கணி­தப் பாடத்­தில் சற்று பின்­தங்கி இருந்த ஸ்ருதி, இறு­தி­யில் 'ஏ' மதிப்­பெண் பெற்­றது தனக்கு மிகுந்த மகிழ்ச்­சியை அளித்­த­தாக அவர் கூறி­னார்.

"நான் தொடர்ந்து பயிற்சி செய்­தேன். தொடக்­கத்­தில் முன்­னேற்­றம் சிறி­த­ளவே இருந்­த­போ­தும் மனம் தள­ர­வில்லை. இறு­தி­யில் இந்த மதிப்­பெண் வாங்­கி­ய­தில் முழு­மை­யான திருப்தி எனக்கு ஏற்­பட்­டுள்­ளது," என்று அவர் கூறி­னார். வருங்­கா­லத்­தில் வர்த்­தக ஆய்­வா­ள­ரா­கப் பணி­பு­ரிய ஆசைப்­படும் ஸ்ருதி, படிப்­ப­தில் இன்­பம் காண்­ப­தா­கக் கூறி­னார்.

செய்தி: கி. ஜனார்த்­த­னன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!