‘இன்று நான் ஒரு விரி­வு­ரை­யா­ளர்’

கி. ஜனார்த்­த­னன்

சிறு வய­தில் தம் தாய் தந்தை இரு­வ­ரை­யும் இழந்­த­வர் வில்­வம் ராமு, 36. உயர்­நி­லைப் பள்­ளி­யில் படித்­த­போது கணி­தப் பாடத்­தில் தோல்வி கண்­டார். ஆனால் தாம் மாண­வ­ரா­கப் பயின்ற அதே நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இன்று ஒரு விரி­வு­ரை­யா­ள­ராக இருக்­கி­றார்.

கட்­டு­மான ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றிய வில்­வத்­தின் தந்தை, ஒரு­நாள் வீட்­டிற்­குச் செல்­லும் வழி­யில் திடீ­ரென மயங்கி விழுந்­தார்.

அப்­போது அவ­ருக்கு 62 வயது. கம்­பம் ஒன்­றில் தலை­யில் அடி­பட்­டது. வெளிக்­கா­யம் எது­வும் இல்லா ததால், அவ­ருக்கு ஒன்­று­மில்லை என்று அனை­வ­ரும் நினைத்­து­விட்­டார்­கள். ஆனால், இர­வில் அவ­ருக்கு வலிப்பு ஏற்­பட்­டதை அடுத்து கோமா நிலைக்­குத் தள்­ளப்­பட்­டார். அதே நாளில் அவர் இறந்­தும் போனார்.

இது நடந்­த­போது வில்­வத்­திற்கு ஏழு வயது. இறப்பு என்­றால் என்ன என்­பதை அந்த வய­தில் புரிந்­து­கொள்ள முடி­யாத வில்­வம், தம்­மு­டைய தாயா­ருக்கு முழு ஆத­ர­வாக இருக்க வேண்­டி­யி­ருந்­தது.

இல்­லத்­த­ர­சி­யா­கவே இருந்த அவ­ரின் தாயார், தந்தை இறந்த பிறகு சாலைத் துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ராக வேலை செய்ய ஆரம்­பித்­தார். அந்த வரு­மா­னம் போதா­த­தால் வார இறுதி நாள்­களில் கேளிக்கை விடு­தி­க­ளின் கழி­வ­றை­க­ளைச் சுத்­தம் செய்­யும் பணி­யைச் செய்­தார்.

வேலைப் பளு­வி­னால் தாயா­ரால் சிறு­வனா தம்­மைச் சரி­யா­கக் கவ­னித்­துக்­கொள்ள இய­லா­த­தால் நண்­பர்­க­ளு­டனே தாம் அதிக நேரம் செல­வ­ழித்­த­தாக திரு வில்­வம் கூறி­னார்.

இத­னால் வில்­வம் படிப்­பில் நாட்­ட­மில்­லா­மல் இருந்­தார். 2000ஆம் ஆண்­டில் வில்­வத்­துக்கு பதி­னாறு வய­தாக இருந்­த­போது அந்­தத் தாயா­ரும் நுரை­யீ­ரல் புற்று நோயால் இறந்­து­விட்­டார்.

"தமி­ழ­கத்­தின் மயி­லா­டு­து­றை­யில் பிறந்த என் தந்தை, சிங்­கப்­பூ­ர­ரான என் தாயா­ரைத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார். அன்­பா­க­வும் பிற­ரு­டன் சுமு­க­மா­க­வும் பழ­கக்­கூ­டி­ய­வர். என் அப்­பா­வு­டன் இருக்­கும்­போது நான் சுதந்­தி­ரத்தை உணர்ந்­தேன்," என்­றார் வில்­வம்.

"அவ­ருக்­குப் பிறகு என் அம்­மா­வும் இறந்­த­போ­து­தான் தனி­மையை உணர்ந்­தேன். அந்த உணர்வு மிக­வும் வேத­னை­மிக்­கது. அப்­போது கோவி­லுக்­குச் சென்று இறை வழி­பாட்­டின்­வழி ஆறு­தல் அடைந்­தேன்," என்­றார் வில்­வம்.

இதை­ய­டுத்து, வேறு பரா­ம­ரிப்பு ஏற்­பாட்­டில் வில்­வம் வளர்ந்­தார். அதே ஆண்­டில் பொதுக்­கல்­விச் சான்­றி­தழ் வழக்­க­நி­லைத் தேர்வை எழு­திய வில்­வம், பின்­னர் தேசிய தொழிற்­கல்­விக் கழ­கத்­தின் மத்­திய கல்­லூ­ரி­யில் சேர்ந்­தார்.

அங்கு 'அலு­வ­ல­கத் திறன்­கள்' துறை­யில் படிப்பை மேற்­கொண்­டார். கசப்­பான சில அனு­ப­வங்­க­ளுக்­குப் பிறகு, வேறு பாடத்­திற்கு மாற முடிவு செய்­தார் அவர்.

தொடக்­கத்­தில் தாதி­மைத் துறைக்கு மாற எண்­ணிய வில்­வம், அதற்­கான போதிய மதிப்­பெண்­க­ளைப் பெறா­த­தால் வேறு துறை­யைப் பற்றி யோசித்­தார்.

பிள்­ளை­யா­ரின் திரு­வு­ரு­வங்­களை வரை­வது, பூஜை அறை அலங்­கா­ரங்­க­ளைச் செய்­வது போன்­ற­வற்­றில் விருப்­பம் இருந்­த­தால் வரை­கலை வடி­வ­மைப்­புத் துறை­யில் சேர முடி­வெ­டுத்­தார்.

"என் அப்பா சிற்­பக் கலை­யில் கைதேர்ந்­த­வர். எனக்­கும் வடி­வ­மைப்­பில் ஆர்­வம் உள்­ளது. இத­னால் வடி­வ­மைப்பு சார்ந்த தொழி­லைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம் என எண்­ணி­னேன்," என்று அவர் கூறி­னார். 2009ஆம் ஆண்­டில் நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் வடி­வ­மைப்­புப் பள்­ளி­யில் சேர்ந்­தார். கல்­லூ­ரி­யின் தலை­சி­றந்த 15% மாண­வர்­களில் ஒரு­வ­ரா­கத் தேர்ச்சி பெற்ற அவர், தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தொழில்­துறை வடி­வ­மைப்­புப் பள்­ளி­யில் சேர்ந்­தார்.

2015ஆம் ஆண்­டில் தாம் பயின்ற அதே நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிக்­குள் ஆசி­ரி­ய­ரா­கக் காலடி வைத்­தார். நினைத்­த­தைச் சாதித்த வில்­வம், கன­வு­க­ளைத் துணிந்து துரத்­திப் பிடிக்­கும்­படி இளை­யர்­க­ளுக்கு அறி­வு­றுத்­து­கி­றார்.

"உங்­களை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். தோல்­வி­கள் ஏற்ப டும்­போது அவற்றை ஏற்­றுக்­கொண்டு தொடர்ந்து நடை­போ­டு­வது முக்­கி­யம்.

"உயர்­நி­லைப் பள்­ளி­யில் கணக்­குப் பாடத்­தில் தோல்வி அடைந்த நான் இப்­போது பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் ஆசி­ரி­ய­ராக இருக்­கி­றேன். உங்­க­ளுக்கு வாய்ப்­பு­கள் ஏரா­ளம் வரும். பிறர் சொல்­வதை அப்­ப­டியே கேட்­டு­வி­டா­மல் எதன் மீது உங்­க­ளுக்கு ஆர்­வம் உள்­ளதோ அதையே தேர்ந்­தெ­டுங்­கள்," என்­றார் இந்த இளம் விரி­வு­ரை­யா­ளர்.

ஆறு ஆண்­டு­க­ளாக பர­தக்­க­லை­யை­யும் கற்று வரு­கி­றார் வில்­வம். நட­னம் ஆடும்­போது இறுக்­கத்­தி­லி­ருந்து விடு­பட்டு ஒரு­வித சுதந்­தி­ரத்தை உணர்­வ­தா­கக் கூறு­கி­றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!