தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் 2021ல் சொகுசு கார்களின் விற்பனை அமோகம்

1 mins read
704dd2b8-1e7d-4559-94a4-0b4b6986eb29
சிங்கப்பூரில் சொகுசு கார்களின் விற்பனை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 40 விழுக்காடு கூடியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் சொகுசு கார்களின் விற்பனை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 40 விழுக்காடு கூடியது. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தகவலின்படி இது தெரியவந்துள்ளது.

மெக்லேரன், லம்போர்கினி, ரோல்ஸ்-ராய்ஸ், பென்ட்லி, ஃபெராரி, ஆஸ்டன் மார்டின் ஆகிய சொகுசு கார் விற்பனை நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கடந்த ஆண்டு 360 கார்களை விற்பனை செய்தன. 2020ல் பதிவான எண்ணிக்கையைவிட இது 38.5 விழுக்காடு அதிகம்.

மேற்கூறப்பட்ட இந்த ஆறு நிறுவனங்கள் விற்கும் பெரும்பாலான கார்களின் விலை $500,000க்கு மேற்பட்டு இருக்கும்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட ஒட்டுமொத்த புதிய கார்களின் எண்ணிக்கையில் சொகுசு கார்கள் 0.8 விழுக்காடு பங்கு வகித்தன. 2020ல் இந்த விகிதம் 0.6 விழுக்காடாக இருந்தது.

சொகுசு கார்களைப் பொறுத்தமட்டில், பென்ட்லி நிறுவனமே கடந்த ஆண்டு ஆக அதிகமாக 103 கார்களை விற்பனை செய்தது.

அதற்கு அடுத்த நிலையில் வந்த ரோல்ஸ்-ராய்ஸ், 90 கார்களை விற்றது. ஃபெராரி நிறுவனம் 65 கார்களையும் லம்போர்கினி 47 கார்களையும் மெக்லேரன் 28 கார்களையும் ஆஸ்டன் மார்டின் 27 கார்களையும் விற்பனை செய்தன.

இதற்கிடையே, போர்ஷே நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 17 விழுக்காடு கூடி 680 ஆனது. அந்நிறுவனம் விற்கும் பெரும்பாலான கார்களின் விலை $300,000க்கும் $500,000க்கும் இடைப்பட்டிருக்கும்.