ஹெங் சுவீ கியட்: அறிவியல் ஒத்துழைப்பு அவசியம்

ஹெங் சுவீ கியட்: அறிவியல் ஒத்துழைப்பு அவசியம்

2 mins read
92c66d8c-5856-406c-b15e-de612d8955fe
-

கிரு­மிப் பர­வல் சூழலை வெற்­றி­கரமாக கடப்­ப­தற்­காக மட்­டு­மின்றி பரு­வ­நிலை மாற்­றம் போன்ற உல­க­ளா­விய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு­காண்­ப­தற்­கும் ஒத்­து­ழைத்து செயல்­படும் வலு­வான உணர்வு ஓர் முக்­கிய அம்­சம் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார்.

இளம் விஞ்­ஞா­னி­க­ளி­டம் மெய்­நிகரா­கப் பேசிய திரு ஹெங், அமெ­ரிக்க விஞ்­ஞானி இயூ­னிஸ் ஃபுட் 1856ஆம் ஆண்டு கரி­ய­மில வாயு எவ்­வாறு சுற்­றுச்­சூ­ழ­லுக்­குக் கேடு விளை­விக்­கும் என்­ப­தைக் கண்டு­பி­டித்த பிறகு ஆயி­ரக்­க­ணக்­கான விஞ்­ஞா­னி­கள் பரு­வ­நிலை தொடர்­பில் ஆற்­றிய பங்­கைச் சுட்­டி­னார். இது, உல­க­ள­வில் வெப்­ப­நி­லையை எவ்­வாறு பாதிக்­கக்­கூ­டும் என்­பது குறித்து விஞ்­ஞா­னி­கள் கணித்­த­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

"இன்­றைய கால­கட்­டத்­தில் இவ்­வ­ளவு தக­வல்­கள் இருக்­கும்­போது பரு­வ­நிலை மாற்­றத்­தின் தாக்­கத்தை நாம் விரி­வாக வெளிப்­படுத்­த­லாம். மற்ற துறை­களில் விஞ்­ஞா­னி­கள் எளி­தில் பயன்­ப­டக்­கூ­டிய சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தீர்­வு­களைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர் - சூரிய சக்தி, காற்று ஆகி­ய­வற்றை உப­யோ­கிக்­கின்­ற­னர், ஹைட்­ரஜ­னை­யும் அதி­க­மா­கப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்." என்று திரு ஹெங் கூறி­னார்.

"புதிய கண்­டு­பி­டிப்­பு­களும் புத்­தாக்க முயற்­சி­களும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­குக் கேடு விளை­விக்­கா­மல் மனி­தர்­க­ளின் வளர்ச்­சிக்கு வழி­வகுத்­துள்­ளன," என்­றும் அவர் சொன்­னார். ஏற்­கெ­னவே பதி­வு­செய்­யப்­'ஜிவை­எஸ்­எஸ்' எனும் உலக இளம் விஞ்­ஞா­னி­கள் சந்­திப்பின் தொடக்க உரை­யில் திரு ஹெங் இவ்­வாறு பேசி­னார்.

இவ்­வா­ண­டுக்­கான 'ஜிவை­எஸ்­எஸ்' சந்­திப்பு மெய்­நி­க­ராக நடை­பெ­று­கிறது. ஆண்­டு­தோ­றும் நடை­பெ­ற்றுவரும் இந்­தச் சந்­திப்பு நேற்று தொடங்கியது.

இது, வரும் வெள்ளிக்­கி­ழமை வரை நடைபெறும்.

தேசிய ஆய்வு நிறு­வ­னம் நடத்­தும் இந்­நி­கழ்ச்­சி­யில் பிர­ப­ல­மான 21 விஞ்­ஞா­னி­கள் இடம்­பெ­று­வர். மேலும், நொபெல் விரு­தைப் பெற்றவர்­கள், 40 நாடு­க­ளைச் சேர்ந்த 800க்கும் அதி­க­மான இளம் ஆய்­வா­ளர்­கள் ஆகி­யோ­ரும் பங்­கேற்­பர்.

இந்த சந்திப்பு இவ்வாண்டு தனது 10ஆம் ஆண்டு நிறை­வைக் கொண்­டாடுகிறது.­ முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமும் நிகழ்வில் கலந்துகொண்டார்.