புதிய தனியார் வீட்டு விற்பனை சரிவு

புதிய தனியார் வீட்டு விற்பனை சரிவு

2 mins read
b5addf64-9d4b-4321-bc30-b5ef627a9789
-

புதிய தனி­யார் வீட்டு விற்­பனை 58 விழுக்­காடு குறைந்­துள்­ளது. சென்ற மாதம் பிற்­பா­தி­யில் சொத்­துச் சந்­தைத் தணிப்பு நட­வ­டிக்­கை­கள் இதற்குக் காரணம்.

சென்ற மாதம் 650 புதிய தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­டன. கடந்த நவம்­பர் மாதம் இந்த எண்­ணிக்கை 1,547ஆகப் பதி­வா­னது.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் வெளி­யிட்ட தக­வல்­ இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது. 'ஈசி' எனும் எக்­சிக்­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் கணக்­கில் எடுக்­க­ப்ப­ட­வில்லை.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் புதிய தனி­யார் வீட்டு விற்­ப­னை­கள் 46.6 விழுக்­காடு சரிந்­தன. 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் விற்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை 1,217.

சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் சென்ற மாதம் 383 புதிய வீடு­களை மட்­டுமே விற்­ப­னைக்கு விட்­ட­னர். சொத்­துச் சந்தை தணிப்பு நட­வடிக்கை­களின் தாக்­கத்தை ஆரா­யக் காத்­தி­ருப்­ப­தாக அவர்­கள் கூறி­னர். கடந்த நவம்­ப­ரில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் சென்ற மாதம் விற்­ப­னைக்கு விடப்­பட்ட புதிய தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்கை 70 விழுக்­காடு குறைந்­தது.

ஆண்டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் டிசம்­பர் மாத எண்­ணிக்கை 71.6 விழுக்­காடு சரிந்­தது.

சென்ற ஆண்டு முழு­வ­தும் 13,118 புதிய தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­டன. எட்டு ஆண்­டு­களில் இத்­தனை புதிய தனி­யார் விட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றது இதுவே முதல் முறை. இதற்­கு­முன் 2013ஆம் ஆண்டு 14,948 புதிய தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­டன.

சொத்­துச் சந்தை தணிப்பு நட­வடிக்­கை­கள், ஆண்டு இறுதி விடு­முறை ஆகிய கார­ணங்­களால் சென்ற மாதம் தனி­யார் வீட்டு விற்­பனை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று ஆரஞ்­சுடீ அன்ட் டை சொத்து நிறு­வ­னத்­தின் மூத்த துணைத் தலை­வர் கிரிஸ்­டீன் சுன் கூறி­னார். சொத்­துச் சந்தை தணிப்பு நட­வடிக்கை­க­ளின் ஒட்­டு­மொத்த தாக்­கத்தை இந்­தப் புள்ளி விவ­ரங்­கள் வெளிப்­ப­டுத்­தா­மல் இருக்­க­லாம் என்றும் அவர் சுட்­டி­னார்.

பொது­வாக டிசம்­பர் மாதத்­தில் விற்­பனை நவம்­ப­ரில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் குறை­வா­கவே இருக்­கும் என்று ஹட்­டன்ஸ் ஏஷியா நிறு­வ­னத்­தின் மூத்த இயக்­கு­நர் லீ சீ டெக் சொன்­னார்.